வைகுண்ட ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

  sreerankam vaikunda aekaathachi vilaavil naalai chorkka vaachal thirappu  nadaiperukirathu. pooloaka vaikundam enralaikkappadum sreerankam rankanaathar koayilil maarkali maatham nadaiperum vaikunda aekaathachi vilaa mikavum chirappudaiyathu. intha vilaa kadantha 25m thaethi thirunedunthaandakaththudan thuvankiyathu.    thirumoali thirunaal enappadum pakalpaththu 10 naadkalum, thiruvaaymoali thirunaal enappadum raappaththu thirunaadkal paththu naadkalum ena 21 naadkal nadaiperukirathu. kadantha 26m thaethi muthal thirumoali thirunaal … Continue reading "vaikunda aekaathachi sreerankaththil naalai chorkkavaachal thirappu"
vaikunda aekaathachi sreerankaththil naalai chorkkavaachal thirappu

 

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவில் நாளை சொர்க்க வாசல் திறப்பு  நடைபெறுகிறது. பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்புடையது. இந்த விழா கடந்த 25ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. 
 
திருமொழி திருநாள் எனப்படும் பகல்பத்து 10 நாட்களும், திருவாய்மொழி திருநாள் எனப்படும் ராப்பத்து திருநாட்கள் பத்து நாட்களும் என 21 நாட்கள் நடைபெறுகிறது. கடந்த 26ம் தேதி முதல் திருமொழி திருநாள் எனப்படும் பகல் பத்து திருநாள் துவங்கியது. 
 
தொடர்ந்து காலை நம்பெருமாள் தினமும் பல்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ராப்பத்து முதல் நாளான நாளை பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுகிறது. இதில் பல லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். 

Popular Post

Tips