முழுமை பெற

1.vaalvin nookkam, thaevaikal, viruppankal ivarrai mathippidduk kolla vaendum. ivai onrukkonru muranpadaamalum amaiththuk kolla vaendum.   2.thanakku amainthulla choolnelaikalaiyum, vaayppukalaiyum kaneththuk kolla vaendum.   3.iyarkaiyin olunkamaippaiyum, athan aarralin vilaivu vithiyaiyum unarnthu kondum, mathiththum nadakka vaendum.   4.vaala vaendiya muraiyaiyum, aarra vaendiya cheyalkalaiyum olunkaakath thokuththuk kolla vaendum.   5.iththakaiya vaalvirkuth thannaith thakuthiyaakkik kolla udal valimaiyaiyum, thiranaiyum, arivaiyum … Continue reading "mulumai pera"
mulumai pera

1.வாழ்வின் நோக்கம், தேவைகள், விருப்பங்கள் இவற்றை மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். இவை ஒன்றுக்கொன்று முரண்படாமலும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

 

2.தனக்கு அமைந்துள்ள சூழ்நிலைகளையும், வாய்ப்புகளையும் கணித்துக் கொள்ள வேண்டும்.

 

3.இயற்கையின் ஒழுங்கமைப்பையும், அதன் ஆற்றலின் விளைவு விதியையும் உணர்ந்து கொண்டும், மதித்தும் நடக்க வேண்டும்.

 

4.வாழ வேண்டிய முறையையும், ஆற்ற வேண்டிய செயல்களையும் ஒழுங்காகத் தொகுத்துக் கொள்ள வேண்டும்.

 

5.இத்தகைய வாழ்விற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ள உடல் வலிமையையும், திறனையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றிற்கு முறையான உடற்பயிற்சியும், உள்ளப் பயிற்சியும் சிந்தனை ஆற்றலையும் பழகிக் கொள்ள வேண்டும்.

 

6.விழிப்போடும், விடாமுயற்சியோடும் எண்ணம், சொல், செயல் இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

 

7.அவ்வப்போது ஏற்படும் தவறுகளை, தற்சோதனை, செயல் திருத்தம் என இரண்டு வழிகளிலும் திருத்தித் தன்னை தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

Popular Post

Tips