என் உயிர்த் தோழி !

chiriththaal chirippatharku palar undu .. poaluthu poakkavae koodi chirikkavum palar undu..   inpaththai maddumae pakira mudinthathu anku !! ithayaththai pakirnthukolla nee maddum thaan en anputh tholi !   chuyam maranthu naechippavar nalam naadiya pala tharunankalil aalamaana nadpu nammul arankaeriyathu !!!   ethaiyum ilakkach chammathikkum aalamaana anpinaal vaeroonriyathu athu !!!   eththanai eththanai uravukal vanthaalum ullam … Continue reading "en uyirth tholi !"
en uyirth tholi !

சிரித்தால் சிரிப்பதற்கு பலர் உண்டு ..
பொழுது போக்கவே கூடி சிரிக்கவும் பலர் உண்டு..

 

இன்பத்தை மட்டுமே பகிர முடிந்தது அங்கு !!
இதயத்தை பகிர்ந்துகொள்ள நீ மட்டும் தான்
என் அன்புத் தோழி !

 

சுயம் மறந்து நேசிப்பவர் நலம் நாடிய
பல தருணங்களில்
ஆழமான நட்பு நம்முள் அரங்கேறியது !!!

 

எதையும் இழக்கச் சம்மதிக்கும்
ஆழமான அன்பினால்
வேரூன்றியது அது !!!

 

எத்தனை எத்தனை உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உனையே நாடும் என் மனம் !!!!!

 

வருடங்கள் பல கடந்து
சந்திக்கும் போதும்
சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்
உன்னிடம் மட்டுமே !

 

சுகத்தைப் பகிர மறந்தாலும்
சோகத்தைப் பங்குபோடத் துடிக்கும்
என் உயிர்த் தோழி !

 

நெஞ்சில் நன்றி சுரக்க
கண்ணில் நீர் வடிய
கை கூப்புகிறேன் மனதில்...

 

உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும் !!!

Popular Post

Tips