வெண் பொங்கல்

  thaevaiyaana poarudkal   pachcharichi – 1 koappai (250 kiraam) paachip paruppu – 50 kiraam milaku – 1/2 thaekkarandi cheerakam – 1 thaekkarandi ney – 1 maejaikkarandi munthiri – 10 ijchi – 1/2 inch alavu karivaeppilai – 1 koththu thanneer – 5 koappai uppu – 1 thaekkarandi   cheymurai   1. pachcharichiyai arai mane naeram … Continue reading "ven poankal"
ven poankal

 

தேவையான பொருட்கள்
 
பச்சரிசி – 1 கோப்பை (250 கிராம்)
பாசிப் பருப்பு – 50 கிராம்
மிளகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
நெய் – 1 மேஜைக்கரண்டி
முந்திரி – 10
இஞ்சி – 1/2 இன்ச் அளவு
கறிவேப்பிலை – 1 கொத்து
தண்ணீர் – 5 கோப்பை
உப்பு – 1 தேக்கரண்டி
 
செய்முறை
 
1. பச்சரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து கழுவி வடித்து வைத்துக் கொள்ளவும்.
 
2. பாசிப்பருப்பை எண்ணெய் விடாமல் வறுத்து கழுவிக் கொள்ளவும்.
 
3. அடுப்பில் குக்கரை வைத்து 5 கோப்பை தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
 
4. பிறகு பாசிப்பருப்பை போட்டு அரை வேக்காடு வேக விடவும்.
 
5. அதனுடன் கழுவி வைத்துள்ள அரிசியைப் போட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும்.
 
6. குக்கரில் 5 விசில் சத்தம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
 
7. தனியாக ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி நெய் விட்டு அதனுடன் உடைத்த முந்திரியை போட்டு வறுத்துக் கொள்ளவும். 
 
8. குக்கரில் ஆவி அடங்கியதும், வறுத்த முந்திரியை அதனுடன் சேர்க்கவும்.
 
9. அதனுடன் சிறிது நெய்யில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, துருவிய இஞ்சி ஆகியவற்றை தாளித்து சேர்க்கவும்.
 
10. பிறகு மீதமுள்ள நெய்யையும் ஊற்றி, கிளறி, சிறிது நேரம் மூடி வைக்கவும்.
 
11. பொங்கல் சிறிது ஆறியவுடன் பரிமாறவும்.
 
குறிப்பு
 
1. ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு தண்ணீரும், பாசிப்பருப்புக்கு ஒரு பங்குக்கு இரண்டு பங்கு தண்ணீரும் சேர்க்கவும்.
 
2. முழு மிளகு சாப்பிட விரும்பாதவர்கள் மிளகுத்தூளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Popular Post

Tips