வெண் பொங்கல் – கத்திரிக்காய் கொத்சு

  thaevaiyaana poarudkal   pachcharichi – 1  kap paachiparuppu – 1 /4 kap thanneer – 4  kap ney – 2 maechaikkarandi milaku – 1 1 /2 thaekkarandi cheerakam – 1  thaekkarandi munthiri paruppu – 1  maechaikkarandi ijchi poadiyaaka arinthathu – 1  maechaikkarandi karuvaeppilai – chirithu   cheymurai   arichi marrum paruppai 30  nemidankal oora vaiththu, … Continue reading "ven poankal – kaththirikkaay kothchu"
ven poankal – kaththirikkaay kothchu

 

தேவையான பொருட்கள்
 
பச்சரிசி – 1  கப்
பாசிபருப்பு – 1 /4 கப்
தண்ணீர் – 4  கப்
நெய் – 2 மேசைக்கரண்டி
மிளகு – 1 1 /2 தேக்கரண்டி
சீரகம் – 1  தேக்கரண்டி
முந்திரி பருப்பு – 1  மேசைக்கரண்டி
இஞ்சி பொடியாக அரிந்தது – 1  மேசைக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
 
செய்முறை
 
அரிசி மற்றும் பருப்பை 30  நிமிடங்கள் ஊற வைத்து, 4  கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் 3 -4 விசில்கள் வரை வேக விடவும்.
 
கடாயில் நெய் ஊற்றி மிளகு, சீரகம் சேர்த்து வதக்கவும். சீரகம் பொன்னிறமானதும் இஞ்சி சேர்த்து வதக்கவும்.
 
பின் முந்திரிபருப்பு , கருவேப்பிலை சேர்த்து வதக்கி பொங்கலில் கொட்டி கலக்கவும்.
 
கொத்சு செய்ய தேவையான பொருட்கள்
 
வயலட் நிற கத்திரிக்காய் – 1  கப்
பாசிபருப்பு – 1 /4 கப்
பெருங்காயம் – சிறிது
பூண்டு – 2  பல்
வெங்காயம் – 1  பெரிய துண்டுகளாக அரிந்தது
தக்காளி – 2  பெரிய துண்டுகளாக அரிந்தது
பச்சை மிளகாய் – 4  நீளமாக அரிந்தது
மஞ்சள்தூள் – சிறிது
மிளகாய்த்தூள் – 1 /4 தேக்கரண்டி
எண்ணெய் –  2  மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1  தேக்கரண்டி
 
செய்முறை
 
பாசிபருப்பை மஞ்சள் தூள், பெருங்காயம், பூண்டு சேர்த்து வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
 
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
 
பின் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
 
இதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு, 5  நிமிடங்கள் வேக வைக்கவும். நன்கு மசிந்திருக்குமாறு வேக விடவும்.
 
பின் வேக வைத்திருக்கும் பருப்பு சேர்த்து நன்கு கலந்து ஒரு நிமிடம் வேக விடவும்.
 
இறுதியாக மல்லிதழை தூவி இறக்கி பொங்கலுடன் பரிமாறவும்.

 

Popular Post

Tips