சமையலறை அழகானால்…………..

  chamaiyalarai enpathu aarokkiyam thodankum idam. aanaal chamaiyalaraiyai alakaaka vaiththukkolla perumpaaloanoor nenaippathillai. aankaankae paaththirankalum, alukku kariththunekalum poaddu vaiththu athan alakaiyae keduththu vaiththiruppar. appadippadda alukkadaintha chamaiyalaraiyai, chanthoshamaana , alakaana idamaaka maarra… chila dips   chuththamaana chuvar aarokkiyam   chamaiyalaraiyil chuththamaana chuvar iruppathu alakukku maddumalla… aarokkiyaththukkum avachiyam. kurippaaka ilaneraththil peyind adiththuk kondaal chinna araiyum periyathaakath theriyum. pukai, … Continue reading "chamaiyalarai alakaanaal………….."
chamaiyalarai alakaanaal…………..

 

சமையலறை என்பது ஆரோக்கியம் தொடங்கும் இடம். ஆனால் சமையலறையை அழகாக வைத்துக்கொள்ள பெரும்பாலோனோர் நினைப்பதில்லை. ஆங்காங்கே பாத்திரங்களும், அழுக்கு கரித்துணிகளும் போட்டு வைத்து அதன் அழகையே கெடுத்து வைத்திருப்பர். அப்படிப்பட்ட அழுக்கடைந்த சமையலறையை, சந்தோஷமான , அழகான இடமாக மாற்ற… சில டிப்ஸ்
 
சுத்தமான சுவர் ஆரோக்கியம்
 
சமையலறையில் சுத்தமான சுவர் இருப்பது அழகுக்கு மட்டுமல்ல… ஆரோக்கியத்துக்கும் அவசியம். குறிப்பாக இளநிறத்தில் பெயிண்ட் அடித்துக் கொண்டால் சின்ன அறையும் பெரியதாகத் தெரியும். புகை, சமையல் துகள்கள் என்று அனைத்தும் சேர்ந்து சமையலறை சுவர் மேலும் அழுக்காகும். இதைப் பார்க்க அருவருப்பாக இருப்பதோடு ஆரோக்கிய கேடும் கூட. அடிக்கடி சுவரை சுத்தப்படுத்தினால் சமையல் செய்யும் உணவுகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் பாதுகாப்பு.
 
புது தொழில் நுட்ப ஸ்டவ்
 
சமையலறைக்கு முகம் போல இருப்பது ஸ்டவ்தான். அது அழகாக இருந்தால்… சமையலறையே மிகவும் அழகாக இருக்கும். தரமான அடுப்பாக இருக்கும் பட்சத்தில் 50 சதவீதம் நேரமும், 50 சதவீதம் எரிசக்தியும் மிச்சமாகும். மேலும் 80 சதவீதம் புகையில்லா சுற்றுச்சூழலும் உருவாகும். ஸ்டவ் வாங்கும்போது விலை குறைவாக இருக்கிறது என்று வாங்காமல்… விலை அதிகமாக இருந்தாலும், நவீன தொழில்நுட்பத்தில் வசதி நிறைந்த ஸ்டவ் வாங்கவும். அடுப்பு நன்றாக இருந்தால், சமையல் செய்யும் சூழலில் ஆர்வம் அதிகமாகும்.
 
பாத்திரங்கள் பளபளப்பு
 
சமையலறையில் பாத்திரங்களை அடுக்கி வைப்பதே ஒருகலை எனவே கரண்டிகள் அடுக்கிவைப்பதற்கு ஏற்ற இடத்தில் கரண்டிகளையும், தட்டுகள் வைப்பதற்கு உள்ள தட்டு, கிண்ணங்களையும் அடுக்கிவைக்கவும். அப்பொழுதுதான் அவசரத்திற்கு எடுப்பதற்கு வசதியாக இருக்கும். பத்து பாத்திரங்களை அதற்குரிய இடத்தில் போட்டு வைப்பது இடைஞ்சலை தவிர்க்கும். சமையல் முடிந்த உடன் உடனே கழுவி வைப்பது வேலையை எளிதாக்கும். சமையலறையை அழகாக்கும்.
 
மளிகைச் சாமான்கள்
 
சமைக்கத் தேவையான மளிகைப்பொருட்களை அந்தந்த பாத்திரங்களில் போட்டுவைத்து பத்திரப்படுத்துவது அவசியம். டப்பாக்களின் மேல் ஸ்டிக்கர் எழுதி ஒட்டி வைப்பது அனைவரும் எடுக்க எளிதாக இருக்கும். எளிதில் பார்க்க ஏற்ற டிரான்ஸ்பரன்ட் பாத்திரங்களில் போட்டு வைப்பது மிகவும் எளிதானது.
 
குறிப்பெடுப்பது கொள்ளுங்கள்
 
பல நேரங்களில் சமையலுக்குத் தேவையான பொருட்கள் முழுவதும் தீர்த்த பின்னரே… அதை நாம் கவனிப்போம். இதனால் அடிக்கடி பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும். இதற்கு சமையலறையில் நோட்டு மற்றும் பேனா வைத்து, அவ்வப்போது குறிப்பெடுத்துக் கொண்டால் அந்தப் பொருட்களை வாங்கி தயார் நிலையில் வைத்துக் கொள்ளலாம். சமையலறையில் எடுக்கும் பொருட்களை அந்தந்த இடங்களில் வைத்து பழகினாலே, எளிதில் எடுக்கலாம். தேடும் நேரம் மிச்சமாகும்.

Popular Post

Tips