ஸ்ரீ என்றால் …………………….

  oru kaditham eluthinaal anuppupavarin peyarin munnaal sree allathu thiru enak kurippidukirom. ithan rakachiyam theriyumaa?    chelvankalukkellaam athipathi makaaladchumi. sree enraal ladchumi. antha ladchumi kudiyirukkum maarpai perrathanaal thaan perumaalukku sreenevaachan enru peyar. thamilil sree yai thiru enak kurippiduvar. thiru enraalum thirumakalaakiya ladchumiyaiyae kurikkum.    maalavanaakiya perumaalin maarpil ladchumi uraivathaal thaan avarai thirumaal enru kurippidukirom. enavae … Continue reading "sree enraal ……………………."
sree enraal …………………….

 

ஒரு கடிதம் எழுதினால் அனுப்புபவரின் பெயரின் முன்னால் ஸ்ரீ அல்லது திரு எனக் குறிப்பிடுகிறோம். இதன் ரகசியம் தெரியுமா? 
 
செல்வங்களுக்கெல்லாம் அதிபதி மகாலட்சுமி. ஸ்ரீ என்றால் லட்சுமி. அந்த லட்சுமி குடியிருக்கும் மார்பை பெற்றதனால் தான் பெருமாளுக்கு ஸ்ரீநிவாசன் என்று பெயர். தமிழில் ஸ்ரீ யை திரு எனக் குறிப்பிடுவர். திரு என்றாலும் திருமகளாகிய லட்சுமியையே குறிக்கும். 
 
மாலவனாகிய பெருமாளின் மார்பில் லட்சுமி உறைவதால் தான் அவரை திருமால் என்று குறிப்பிடுகிறோம். எனவே நாம் யாருக்கு கடிதம் எழுதுகிறோமோ அவரது வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும் என்ற பொருளிலேயே நாம் ஸ்ரீ எனவும் திரு எனவும் குறிப்பிடுகிறோம். 
 
பூர்ணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், ஸ்ரீ சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை, தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, கண்ணாடி, வில்வம், நெல்லி, துளசி, கோமியம், சங்கு, தாமரை ஆகியவற்றிலும் பசு, யானை முதலிய பிராணிகளிடமும், பொறுமை மிக்கவர்கள், சுமங்கலிகள், தேவர்கள், ஞானிகள், பசுக்களை பராமரிப்போர், ஸ்திரபக்தி கொண்டவர்கள் ஆகியோரிடமும் லட்சுமி நிரந்தர வாசம் செய்கிறாள்.

Popular Post

Tips