நலம் தரும் நடராஜன் தரிசனம்

  asvine, parane ena thodanki raevathi varai 27 nadchaththirankal irunthaalum ‘thiru’ enra adaimoaliyudan kurikkappaduvathu aathirai, oanam aakiya 2 nadchaththirankal maddumae. ithil thiruvonam vishnuvukku uriyathaakum. thiruvaathirai enpathu chivanen nadchaththiram. maarkaliyil varum thiruvaathirai nadchaththiram vichaesham. innaal thillai ampalaththarachanukku chirappaana viratha naalaakum.   chiththarkalum, munevarkalum, yoakeesvararkalum chivanukku poaka nelai, vaeka nelai, yoaka nelai enra 3 vitha koalankalai kurippiddullaarkal. … Continue reading "nalam tharum nadaraajan tharichanam"
nalam tharum nadaraajan tharichanam

 

அஸ்வினி, பரணி என தொடங்கி ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் இருந்தாலும் ‘திரு’ என்ற அடைமொழியுடன் குறிக்கப்படுவது ஆதிரை, ஓணம் ஆகிய 2 நட்சத்திரங்கள் மட்டுமே. இதில் திருவோணம் விஷ்ணுவுக்கு உரியதாகும். திருவாதிரை என்பது சிவனின் நட்சத்திரம். மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரம் விசேஷம். இந்நாள் தில்லை அம்பலத்தரசனுக்கு சிறப்பான விரத நாளாகும்.
 
சித்தர்களும், முனிவர்களும், யோகீஸ்வரர்களும் சிவனுக்கு போக நிலை, வேக நிலை, யோக நிலை என்ற 3 வித கோலங்களை குறிப்பிட்டுள்ளார்கள். மனைவி, மக்கள், வீடு, வாசல் என்று குடும்பஸ்தராக, கல்யாண சுந்தரராக, உமாமகேஸ்வரராக, சோமாஸ்கந்தராக அருள் செய்வது போக நிலை. தீமைகளை போக்கும் விதத்தில் சம்ஹார மூர்த்தியாக அவர் வேக வடிவம் எடுக்கிறார். கஜசம்ஹாரர், காம தகன மூர்த்தி, ருத்திர மூர்த்தி என்ற வடிவங்களில் தீமைகளை போக்குகிறார். மிக உயர்ந்த நிலை ஞான நிலை எனப்படும் யோக நிலை. ஞான மூர்த்தியாக வரும்போது மவுனமே பிரதானம். இதுவே தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தியாகும். போகம், வேகம், யோகம் என்ற 3 கோலங்களையும் ஒருசேர அருள்வதே நடராஜர் வடிவம்.
 
சிவத்தொண்டும் திருவாதிரை களியும்
 
சிதம்பரத்தில் வாழ்ந்துவந்த சிவ பக்தர் சேந்தனார். சிவனடியார்களுக்கு அமுது படைப்பதை தொண்டாக செய்து வந்தார். தினமும் அடியார் ஒருவருக்கு உணவளித்த பிறகுதான் சாப்பிடுவார். ஒருமுறை பலத்த மழை பெய்தது. சமைக்க வைத்திருந்த விறகுகள் நனைந்துவிட்டன. எப்படி சமைப்பது என்று சேந்தனாரும் அவரது மனைவியும் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மிகப்பெரிய ஜடா முடியுடன் சிவனடியார் ஒருவர் வந்துவிட்டார். 
 
பதறியபடியே சேந்தனாரும் அவரது மனைவியும் அவரை வரவேற்று உபசரித்தனர். ஈரவிறகை பயன்படுத்தி எப்படியோ ஊதி சூடேற்றிப் பற்ற வைத்து, அரிசியை மாவாக்கி உளுந்து, வெல்லம், நெய், கலந்து களி தயாரித்தனர். அதை பக்தியுடன் சிவனடியார்க்கு படைத்தார்கள். அன்றைய தினம் மார்கழியும் பவுர்ணமியும் இணைந்த திருவாதிரை நாள். 
 
வந்த அடியார் களியை ரசித்து, ருசித்து சாப்பிட்டு, ‘இத்தனை சுவையான களியை வாழ்நாளில் சாப்பிட்டதில்லை. தினமும் தயிர் சாதம், புளி சாதம், சர்க்கரை பொங்கல் சாப்பிட்டு பழகிப் போன எனக்கு களி அமிர்தம் போல இருந்தது’’ என்றார். அதை கேட்டு தம்பதியர் மகிழ்ச்சியும், குதூகலமும் அடைந்தனர்.
 
மறுநாள் காலை. நடராஜ பெருமானை தரிசிக்க சேந்தனாரும் மனைவியும் சிதம்பரம் கோயிலுக்கு சென்றனர். அங்கே கோயில் நடையெல்லாம் களி சிதறி கிடந்தது. அது முதல்நாள் இரவு சிவனடியாருக்காக அவர்கள் தயாரித்த களி. வீட்டில் செய்தது கோயிலுக்கு எப்படி வந்தது என்ற சந்தேகத்துடன் நடராஜர் சன்னதிக்கு சென்றார்கள். அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி தந்தது. நடராஜரின் வாயில் சிறிதளவு களி ஒட்டியிருந்தது. 
 
வீடு தேடி வந்து களி சாப்பிட்டு சென்றது சாட்சாத் சிவபெருமானே என்று உணர்ந்து மெய் சிலிர்த்தார்கள். கண்களில் நீர் பனிக்க நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார்கள். ஆருத்ரா தரிசனத்தன்று ஆதிரைக் களி படைக்கும் வழக்கம் அப்போது முதல் உண்டானது. உண்மையான பக்தியுடன் எளிமையான உணவு படைத்தாலும் ஆண்டவன் ஏற்றுக்கொள்வான் என்பதே இதன் தாத்பர்யம்.
 
சிவபெருமான் அபிஷேக பிரியன். தினமும் பலமுறை அவருக்கு அபிஷேகம் நடக்கும். நடராஜ பெருமானுக்கு அப்படியல்ல. நடராஜருக்கு ஓர் ஆண்டில் 6 முறைதான் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது சாஸ்திர விதி. அதன்படி மார்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம் ஆகிய நட்சத்திர நாட்களிலும் ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்களின் வளர்பிறை சதுர்த்தசி திதியிலும் அபிஷேகம் நடக்கும். திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனம் செய்து சகல பாவங்கள், தோஷங்கள், தடைகள் நீங்கி வளமான வாழ்வு பெறுவோமாக!

Popular Post

Tips