குட்டை முடி உள்ளவர்களுக்கு ஏற்ற அழகான மணப்பெண் அலங்காரம்

  manappen alankaaraththil anaivarin kavanaththaiyum kavarvathu chikai alankaaramthaan. thaali kaddum naeraththil alakaay pinne, poovaiththu alankarippathu oru vakai enraal, richapchanukku enru sdailaaka chikai alankaaram cheythu marroruvakai. chinnamudi ullavarkal veeddilaeyae sdailaaka alankaaram cheythu kolla aerra chikai alankaaraththai theriviththullanar alakiyal nepunarkal.   maadarn prejch rol   chimpilaana alankaaraththudan thirumana varavaerpil nerka virumpum manappenkalukku aerra har-sdail ithu! pirajchu rolil … Continue reading "kuddai mudi ullavarkalukku aerra alakaana manappen alankaaram"
kuddai mudi ullavarkalukku aerra alakaana manappen alankaaram

 

மணப்பெண் அலங்காரத்தில் அனைவரின் கவனத்தையும் கவர்வது சிகை அலங்காரம்தான். தாலி கட்டும் நேரத்தில் அழகாய் பின்னி, பூவைத்து அலங்கரிப்பது ஒரு வகை என்றால், ரிசப்சனுக்கு என்று ஸ்டைலாக சிகை அலங்காரம் செய்து மற்றொருவகை. சின்னமுடி உள்ளவர்கள் வீட்டிலேயே ஸ்டைலாக அலங்காரம் செய்து கொள்ள ஏற்ற சிகை அலங்காரத்தை தெரிவித்துள்ளனர் அழகியல் நிபுணர்கள்.
 
மாடர்ன் ப்ரெஞ்ச் ரோல்
 
சிம்பிளான அலங்காரத்துடன் திருமண வரவேற்பில் நிற்க விரும்பும் மணப்பெண்களுக்கு ஏற்ற ஹேர்-ஸ்டைல் இது! பிரஞ்சு ரோலில் ஒரு புது வகையைச் சேர்ந்த இதை மாடர்ன் பிரெஞ்சு ரோல் என்பர். இந்த வகை ஹேர் ஸ்டைல் குறைவான முடி உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது. இதில், ‘போனிடெய்ல்’ போடுவதில்லை என்பதால் ஒரே ஒரு ‘சாண்’ முடி உள்ளவர்களும் இதைப் போட்டுக் கொள்ளலாம்.
 
தலைமுடி முழுவதையும் பின்பக்கம் இழுத்து வாரிக்கொண்டு ஒரு கற்றை முடியை மட்டும் காது பக்கத்தில் விட வேண்டும். கை எடுக்காமல் முடியைச் சுற்றி ‘பன்’ போலப் போட வேண்டும். கையை எடுக்காமல் முடியைச் சுற்றுவதால் ஒரு பக்கம் ‘ரோல்’ போலவும், ஒரு பக்கம் ‘பன்’ போலவும் வரும். குறைந்த முடிக்கு ‘சப்பளிமென்ட்’ செய்ய ‘ஹேர் ரோல்ஸ்’ உண்டு. இவை கறுப்பு, பிரவுன் எனப் பல நிறங்களில் உண்டு. இதைக் கொண்டைப் பகுதியில் வைத்தால் நன்றாக இருப்பதுடன் முன்பக்கம் பார்க்கப் பெரியதாகவும், அசல் முடி போலவும் இருக்கும். இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். அப்படியே விரலினாலும் முன்புற முடியைச் சுருட்டி ஹேர்பின் போட்டு வைத்தால் முடி நன்கு சுருண்டு நிற்கும், சுருள் ஆக!
 
ரப்பில்ஸ் ஹேர் ஸ்டைல்
 
தழையத் தழைய ஹேர்-ஸ்டைல்கள் செய்து கொள்ள விருப்பப்படும் பலருக்கும் விருப்பம் இருந்தாலும் அதற்கேற்றபடி முடியும் நீளமும் அடர்த்தியும் அமையாதவர்களுக்கு அறிமுகமாகியுள்ளவைதான் ‘ரப்பில்ஸ்’கள்.
 
முடியினால் ஆன இந்த சிகை அலங்கார சாதனம் உட்புறம் அலுமினியக் கம்பியால் ஆனது. இது வளைத்தபடி வளையும். முடியை நன்கு வாரி போனிடெய்ல் போட்டு அதை அப்படியே சிறிய கொண்டையாகச் சுற்றிய பின்பு அதில் ரப்பில்ஸ் வைத்து அட்டாச் செய்து பாருங்கள்! உங்கள் இஷ்டம் போலச் சிறப்பான – முடியில்லாத குறையை மறைத்து தழையத் தழைய பெரிய ஹேர்ஸ்டைலாக அமைக்க முடியும். இதையே தலைக்கு மேலும் பெரிய கொண்டையாகவும் போடலாம்.
 
நியூ பின்னி பிச் சோடா
 
மூன்றாவது வகை ஹேர் ஸ்டைலும் குறைந்த முடி உள்ளவர்களுக்குத்தான். குறைவான சின்ன முடியை வாரி சின்னப் ‘போனிடெய்ல்’ போட்டு சவுரி வைத்து நீண்ட பின்னலாகப் பின்னி நுனி பிரியாமலிருக்க ஒரு ரப்பர் பேண்ட் போடுவதோ அல்லது கறுப்புக் கயிறு கட்டுவதோ செய்ய வேண்டும். இதையே கொண்டையாகச் சுற்றி அதில் கொண்டை ஊசி செருக வேண்டும். நீண்ட கூந்தல் உள்ளவர்களும் சவுரி வைக்காமல் அப்படியே பின்னி கொண்டை சுற்றிக் கொள்ளலாம். சிவப்பு ரோஜா இதழ்களை ஒரு பக்கமாகக் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பொக்கே செய்யும் போது பயன்படுத்தும் பச்சைத் தழையையும் இதே போல கட்டி வைத்துக்கொண்டு கொண்டையின் மீது ஒன்றின் மேல் ஒன்று வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். பட்டுப் புடவைகளுக்கு இது ரொம்பவும் மேட்ச் ஆகும். அந்த நாளில் இதை பின்னி பிச்சோடா போடுவது என்பர். இன்று சில மாற்றங்களுடன் புது ஹேர்ஸ்டைலாக உருவெடுத்துள்ளது.
 
குறைவான முடி உள்ளவர்கள் அதை வாரி சிறிய போனிடெயில் போட்டு ரவுண்டாகப் பின் செய்து அதில் கிளிப்புடன் கூடிய ஹேர் அட்டாச்மென்ட்டுகளைப் பயன்படுத்தி அன்றாடம் ஒரு ஹேர்ஸ்டைல் செய்து கொள்ளலாம். கிளிப்புடன் கூடிய ஹேர் அட்டாச்மென்ட்டுகள் குறைவான முடி உடையவர்கள் குறிப்பாக முடியை மிகவும் குட்டையாக வெட்டிக் கொண்ட இளம்பெண்கள் திருமண நாளன்று ஹேர்ஸ்டைல்கள் செய்து கொள்ள இது மிகவும் கைகொடுத்து உதவக்கூடியது. இழுத்தாலும் அவிழ்ந்து வராது. முடியுடன் சேர்த்துக் கிளிப் செய்து விடலாம்.
 
இந்த ஹேர்ஸ்டைல் வகைகளை யார் வேண்டுமானாலும் எளிதாக வீட்டிலிருந்தபடியே போட்டுக் கொள்ளலாம். நேரமும் செலவும் மிச்சம். அழகாக ஸ்டைல் செய்து அமர்க்களமாகச் சென்று அனைவரையும் அசத்தலாம். ஹேர்ஸ்டைல்களைக் கலைத்த பின்பு இரவில் முடியை நன்கு பிரித்துப் போட்டுக் காற்றாட விட வேண்டும். அப்பொழுதுதான் முடி கொட்டாது. தலை லேசாகவும் இருக்கும்.

Popular Post

Tips