ராகு கால துர்க்கா அஷ்டகம்….

  vaalvu aanaval thurkaa vaakkumaanaval vaanel nenraval intha mannel vanthanal thaalvu arraval thurkaa thaayumaanaval thaapam neekkiyae ennaith thaankum thurkkaiyae  thaevi thurkkaiyae jaeya thaevi thurkkaiyae thaevi thurkkaiyae jaeya thaevi thurkkaiyae       ulakaiyenraval thurkaa umaiyumaanaval  unmaiyaanaval enthan uyiraik kaappaval  nelavil nenraval thurkaa nethyaiyaanaval  nelavi nenraval enthan nethiyum thurkkaiyae thaevi thurkkaiyae jaeya thaevi thurkkaiyae  thaevi thurkkaiyae … Continue reading "raaku kaala thurkkaa ashdakam…."
raaku kaala thurkkaa ashdakam….

 

வாழ்வு ஆனவள் துர்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே 
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே  
 
 
உலகையீன்றவள் துர்கா உமையுமானவள் 
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள் 
நிலவில் நின்றவள் துர்கா நித்யையானவள் 
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே 
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
 
செம்மையானவள் துர்கா செபமுமானவள்
அம்மையானவள் அன்புத் தந்தையானவள்
இம்மை ஆனவள் துர்கா இன்பமானவள்
மும்மையானவள் என்றும் முழுமையானவள்
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
 
 
உயிருமானவள் துர்கா உடலுமானவள்
உலகமானவள் எந்தன் உடமையானவள்
பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே 
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
 
துன்பமற்றவள் துர்கா துரிய வாழ்பவள்
துறையுமானவள் இன்பத் தோணி யானவள்
அன்பு உற்றவள் துர்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
 
 
குருவுமானவள் துர்கா குழந்தையானவள்
குலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவுமானவள் துர்கா திருசூலி மாயவள்
திருநீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
 
 
ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
 
 
கன்னி துர்க்கையே இதயக் கமலா துர்க்கையே
கருணை துர்க்கையே வீரக் கனக துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே 
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

Popular Post

Tips