தலை முடி வளர….

thalaiyil neelamaana mudi irukka vaendum enru oru chaaraar virumpinaalum, mudi neelamo kuddaiyoa, athu karukaruvena irukka vaendum enpathae anaivarin viruppamaaka irukkum. karukaru mudiyai, ilamaiyin alavukoalaaka karuthuvathum, itharku oru kaaranam. aanaal, inru palarukkum ilavayathilaeyae mudi naraikkum pirachchinai aerpadukirathu.   itharku, paramparai, rachaayana har-daikal payanpaduththuvathu, manaaluththam marrum ooddachchaththu kuraipaadu poanra palvaeru kaaranankal ullana. ithai poakka, itho chila dipskal… … Continue reading "thalai mudi valara…."
thalai mudi valara….

தலையில் நீளமான முடி இருக்க வேண்டும் என்று ஒரு சாரார் விரும்பினாலும், முடி நீளமோ குட்டையோ, அது கருகருவென இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும். கருகரு முடியை, இளமையின் அளவுகோலாக கருதுவதும், இதற்கு ஒரு காரணம். ஆனால், இன்று பலருக்கும் இளவயதிலேயே முடி நரைக்கும் பிரச்சினை ஏற்படுகிறது.

 

இதற்கு, பரம்பரை, ரசாயன ஹேர்-டைகள் பயன்படுத்துவது, மனஅழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. இதை போக்க, இதோ சில டிப்ஸ்கள்…

 

* முதலில் தலைமுடியை நன்கு பராமரிக்க வேண்டும். உணவில் சத்துள்ள கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

வைட்டமின் பி12, வைட்டமின் இ, இரும்புச்சத்து ஆகியவை அதிகளவில் காணப்படும், இறைச்சி, முட்டை, பால், மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றை சாப்பிடலாம்.

 

* தலை முடிக்கு பிளீச்சிங் போன்ற ரசாயன சிகிச்சை அளிப்பதை தவிர்க்க வேண்டும்.

 

* நெல்லிக்காய், பூந்திக்கொட்டை மற்றும் சிகைக்காய் ஆகியவற்றை சமஅளவில் அரைத்து, அதை முதல் நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் தலைக்கு தேய்த்துக் குளிக்கலாம்.

 

* ஏற்கனவே நரை முடி ஏற்பட்டவர்கள், அதை மறைக்க, ஹென்னா மற்றும் நெல்லிக்காய் பவுடர்களை நான்கிற்கு ஒன்று என்ற வீதத்தில் கலந்து, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட டைகளை பயன்படுத்தலாம்.

 

* கறிவேப்பிலையை, தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது, நரைமுடி ஏற்படுவதை தவிர்க்க உதவும். கறிவேப்பிலை மற்றும் புதினா ஆகியவற்றை சம அளவில் எடுத்து, அதனுடன், சிறிது பூண்டு, இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து சட்னி செய்து சாப்பிடலாம்.

 

* வாரம் ஒரு முறையாவது, தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி, சூடான எண்ணெய் மசாஜ் செய்து கொள்ளலாம்.

Popular Post

Tips