வரவேற்பறைக்கு கம்பீரம் தரும் நாற்காலிகள்!

  veeddirkul varum uravinarkalum, nanparkalum amarnthu nammudan uraiyaadum idam varavaerparai. avarkal athikam payanpaduththum poarul naarkaalithaan. enavae veeddin varavaerparaiyai alankarippathilum naarkaali, choapaa poanravaikalukkae munnurimai undu. enavae idam kidakkirathae enru naarkaalikalai nerappi vidakkoodaathu. sareyana alavulla maejai naarkaalikalai vaankinaalthaan idaththai adaiththuk kollalaamal alakaakavum, payanpaduththa aerrathaakavum irukkum.   namakkaanathu naarkaali   nam veeddirku vaankum naarkaali maejaikalai namakkaanathaaka vaankavaendum. namathu … Continue reading "varavaerparaikku kampeeram tharum naarkaalikal!"
varavaerparaikku kampeeram tharum naarkaalikal!

 

வீட்டிற்குள் வரும் உறவினர்களும், நண்பர்களும் அமர்ந்து நம்முடன் உரையாடும் இடம் வரவேற்பரை. அவர்கள் அதிகம் பயன்படுத்தும் பொருள் நாற்காலிதான். எனவே வீட்டின் வரவேற்பரையை அலங்கரிப்பதிலும் நாற்காலி, சோபா போன்றவைகளுக்கே முன்னுரிமை உண்டு. எனவே இடம் கிடக்கிறதே என்று நாற்காலிகளை நிரப்பி விடக்கூடாது. சரியான அளவுள்ள மேஜை நாற்காலிகளை வாங்கினால்தான் இடத்தை அடைத்துக் கொள்ளலாமல் அழகாகவும், பயன்படுத்த ஏற்றதாகவும் இருக்கும்.
 
நமக்கானது நாற்காலி
 
நம் வீட்டிற்கு வாங்கும் நாற்காலி மேஜைகளை நமக்கானதாக வாங்கவேண்டும். நமது உடல் அமைப்பு, பழக்க வழக்கம் போன்றவற்றை கவனத்தில் கொண்டு வாங்கவேண்டும். பக்கத்து வீட்டில் வாங்கியிருக்கின்றனரே என்பதற்காக அதே மாதிரி நாமும் வாங்கவேண்டும் என்று எண்ணி வாங்கத் தேவையில்லை.
 
சிறிய குழந்தைகள், வயதானவர்கள் உள்ள வீடுகளில் அவர்களுக்கு ஏற்ற இட வசதியை ஏற்படுத்தக்கூடிய நாற்காலிகளை வாங்கவேண்டும். அறையை அடைத்துக்கொள்ளும் பர்னிச்சர்களை வாங்குவதை விட மடக்கி போட வசதியான நாற்காலிகளை வாங்குவது நல்லது. ஏனெனில் இருவருக்குமே இடைஞ்சல் ஏற்படுத்தாத வகையில் நாற்காலி மேஜைகளை போடுவது அவசியம்.
 
வரவேற்பரையின் கம்பீரம்
 
நாற்காலிகளை வாங்கும் போது பல விசயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். சிறிய வரவேற்பரையாக இருப்பின் மடித்து வைக்கும் நாற்காலிகளை வாங்கலாம். தேவையற்ற சமயத்தில் மடித்து வைக்க வசதியாக இருக்கும்.
 
சோபா வாங்குவதனால் அதை பராமரிப்பது கொஞ்சம் சிரமமானது எனவே அதற்கான வசதி உள்ளதா என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
 
பெரிய தாராளமான இடம் என்றால் மரத்தாலான வேலைப்பாடுகள் கொண்ட நாற்காலிகளை போடலாம். இதனால் வரவேற்பரைக்கு கூடுதல் கம்பீரம் கிடைக்கும்.
 
ஆரோக்கியம் தொடர்புடையது
 
நீண்ட நேரம் அமர்வதாக இருந்தால் எண்ணெய் கரை உள்ளிட்டவைகள் நாற்காலி மேஜைகளை பாதிக்காத வகையில் விரிப்புகளை கொண்டு நாற்காலி, சோபாக்களை அலங்கரிக்கலாம். மாதம் இருமுறை அவற்றை கழற்றை துவைத்து பின் மாட்டலாம். இது ஆரோக்கியத்தோடும் தொடர்புடையது.
 
முக்கியமாக நம்மிடம் பணம் இருக்கிறது என்பதற்காகவும் பகட்டை காண்பிக்க வேண்டும் என்பதற்காகவும் பொருட்களை வாங்காமல் நமக்கு தேவையான, அத்தியாவசியமான பொருட்களை வாங்கினாலே வீடும் அழகாகும். வீட்டிற்கு வருபவர்களுக்கும் வசதியாக இருக்கும்.

Popular Post

Tips