கை கழுவுதல்

kaiyai neenkal thinamum kaluvi chuththam cheyveerkalaa? chaappidum poathum chari, vaeru chamayankalilum eththanai nodikal kaiyai choappu poaddu chuththam cheyveerkal? hand vaash thiravaththai vaanki payanpaduththupavaraa neenkal?   ennadaa ithu, kai kaluvuvathil ivvalavu vishayam irukkirathaa enru neenkal nenaikkalaam; aanaal, padiththu mudiththapin, ine, thinamum olunkaaka kaikalai kaluvuveerkal.   naakarika ulakil, ippoathellaam, eppadi pal thulakkuvathu, eppadi kaiyai kaluvuvathu enru payirchi … Continue reading "kai kaluvuthal"
kai kaluvuthal


கையை நீங்கள் தினமும் கழுவி சுத்தம் செய்வீர்களா? சாப்பிடும் போதும் சரி, வேறு சமயங்களிலும் எத்தனை நொடிகள் கையை சோப்பு போட்டு சுத்தம் செய்வீர்கள்? ஹேண்ட் வாஷ் திரவத்தை வாங்கி பயன்படுத்துபவரா நீங்கள்?

 

என்னடா இது, கை கழுவுவதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால், படித்து முடித்தபின், இனி, தினமும் ஒழுங்காக கைகளை கழுவுவீர்கள்.

 

நாகரிக உலகில், இப்போதெல்லாம், எப்படி பல் துலக்குவது, எப்படி கையை கழுவுவது என்று பயிற்சி வகுப்பு துவங்கினால் கூட, ஆச்சரியப் படுவதற்கில்லை.

 

தனி நபர் சுத்தத்தில் நாம் மிகவும் பின்தங்கியிருப்பதால்தான், புதுப்புது வைரஸ் நோய்கள் பரவிக்கொண்டிருக்கின்றன.

 

உங்கள் கைகள், எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கிறது என்று நீங்கள் என்றாவது நினைத்துப் பார்த்ததுண்டா?

 

உடல் கோளாறுகளை அண்ட விடாமல் இருக்க, கைகளை சுத்தமாக வைத்திருப்பது மிக, மிக அவசியம். பன்றிக்காய்ச்சல் நோய் வரும் வரை, கையை சுத்தமாக கழுவுவது பற்றி, பலருக்கு பெரிய அளவில் விழிப்புணர்வு இருந்ததில்லை.

 

ஆனால், கைகளை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால், அவற்றில் பன்றிக் காய்ச்சல் வைரஸ் பரவி அதன் மூலம், ஒருவருக்கு அந்த நோய் வரும் ஆபத்து உண்டு என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்த பின் தான் மக்கள் விழித்துக் கொண்டனர்.

 

பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க, "ஹேண்ட் சேனிட்டர்' மற்றும் "ஹேண்ட் வாஷ்' லோஷன்கள் மூலம் கையை கழுவ வேண்டும்; அப்படி செய்தால், வைரஸ் தாக்காது என்று அறிவிப்பு வெளிவந்ததும், இந்த லோஷன்கள் விற்பனை கொடிகட்டிப்பறந்தது. தரமான, "ஹேண்ட் சேனிட்டர்' லோஷன்களை சில நிறுவனங்கள் தான் தயாரித்து விற்பனை செய்தன. ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள், பெயரளவுக்கு இவற்றை புதுப் புது பெயர்களில் வெளியிட்டு, சந்தையில் குவித்தன. எது நல்ல, "ஹேண்ட் சேனிட்டர்' என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? 60 முதல் 90 சதவீதம் வரை ஆல்கஹால் கலந்த சேனிட்டர்களாக இருந் தால் தான் நல்லது.

 

வைரஸ்களை அப்புறப் படுத்தி, கையை சுத்தப்படுத்த ஆல்கஹால் அடிப்படையிலான, திரவ சாதனங்கள் தான், சிறந்தது என்றும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதெல்லாவற்றுக்கும் மேலாக, தரமான சோப்பால் கையை சுத்தப்படுத்தினாலே போதும்.

 

தண்ணீரில் கைகளை கழுவி, சோப்பு போட்டு சுத்தம் செய் தால் தான் இடுக்குகளில் உள்ள கிருமிகள் நீங்கும் கைகளும் சுத்தமாகும்.

 

குறிப்பாக, ஆன்டி பாக்டீரியல் லோஷன்களை விட, சோப்பு போட்டு கழுவுவதுதான் மிக வும் நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

கைகளை சுத்தம் செய்யும் போது, குறைந்த பட்சம் 30 நொடிகளாவது கைகளை சோப்பு, லோஷன்கள் மூலம் சுத்தம் செய்து அதன் பின், தண்ணீரில் கழுவ வேண்டும்.

 

டென்ஷன்...' அர்ஜென்ட்... என்று எல்லாம் சாக்கு போக்கு சொல்லாமல், கை சுத்தம் செய்து, நோய் பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்வீர்கள்தானே!

Popular Post

Tips