கோமாதாவின் பெருமை தெரியுமா?

  inthu chamayaththil pachuvai vanankuvathaip perum punneyamaakak karuthukinranar. inthap pachuvai koamaathaa enrum, kaamathaenu pachu enrum perumaiyudan alaikkinranar. pachuvin udalil ovvooru pakuthiyilum theyvankalum, punethaththirkuriyavarkalum iruppathaakak karuthukinranar.   pachuvin kompukalin adiyil – piramman, thirumaal    kompukalin nuneyil – koathaavari muthaliya punneya theerththankal,charaachai uyir varkkankal    chiram – chivaperumaan   nerri naduvil – chivachakthi   mookku nuneyil – … Continue reading "koamaathaavin perumai theriyumaa?"
koamaathaavin perumai theriyumaa?

 

இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப் பெரும் புண்ணியமாகக் கருதுகின்றனர். இந்தப் பசுவை கோமாதா என்றும், காமதேனு பசு என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர். பசுவின் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும், புனிதத்திற்குரியவர்களும் இருப்பதாகக் கருதுகின்றனர்.
 
பசுவின் கொம்புகளின் அடியில் - பிரம்மன், திருமால் 
 
கொம்புகளின் நுனியில் - கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள் 
 
சிரம் - சிவபெருமான்
 
நெற்றி நடுவில் - சிவசக்தி
 
மூக்கு நுனியில் - குமரக் கடவுள்
 
மூக்கினுள் - வித்தியாதரர்
 
இரு காதுகளின் நடுவில் - அசுவினி தேவர்
 
இரு கண்கள் - சந்திரர், சூரியர்
 
பற்கள் - வாயு தேவர்
 
ஒளியுள்ள நாவில் - வருண பகவான்
 
ஓங்காரமுடைய நெஞ்சில் - கலைமகள்
 
மணித்தலம் - இமயனும் இயக்கர்களும்
 
உதட்டில் - உதயாத்தமன சந்தி தேவதைகள்
 
கழுத்தில் - இந்திரன்
 
முரிப்பில் - பன்னிரு ஆரியர்கள்
 
மார்பில் - சாத்திய தேவர்கள்
 
நான்கு கால்களில் - அனிலன் எனும் வாயு
 
முழந்தாள்களில் - மருத்துவர்
 
குளம்பு நுனியில் - சர்ப்பர்கள்
 
குளம்பின் நடுவில் - கந்தவர்கள்
 
குளம்பிம் மேல் இடத்தில் - அரம்பை மாதர்
 
முதுகில் - உருத்திரர்
 
சந்திகள் தோறும் - எட்டு வசுக்கள்
 
அரைப் பரப்பில் - பிதிர் தேவதைகள்
 
யோனியில் - ஏழு மாதர்கள்
 
குதத்தில் - இலக்குமி தேவி
 
வாயில் - சர்ப்பரசர்கள்
 
வாலின் முடியில் - ஆத்திகன்
 
மூத்திரத்தில் - ஆகாய கங்கை
 
சாணத்தில் - யமுனை நதி
 
ரோமங்களில் - மகாமுனிவர்கள்
 
வயிற்றில் - பூமாதேவி
 
மடிக்காம்பில் - சகல சமுத்திரங்கள்
 
சடாத்களியில் - காருக பத்தியம்
 
இதயத்தில் - ஆசுவனீயம்
 
முகத்தில் - தட்சிணாக்கினி
 
எலும்பிலும், சுக்கிலத்திலும் - யாகத் தொழில் முழுவதும்
 
எல்லா அங்கங்கள் தோறும் - கலங்கா நிறையுடைய கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள்.

Popular Post

Tips