மேக்கப் ரகசியம்…………

  maek-ap poadda aduththa nemidamae veliyae kilampi vidaatheerkal. poaka vaendiya naeraththirku oru mane naeram munnathaakavae maek-ap poaddu vidunkal. appoathu thaan, athu charumaththudan chaernthu alakaaka, iyarkaiyaaka theriyum. illaaviddaal, peyind adiththa maathiri theriyum.   maek-ap poaddu kolvathu periya vishayamillai. athu, unkal mukaththil ulla chinna, chinna kuraikalai theerppathaaka irukka vaendum. enavae, muthalil athai karruk kollunkal. vilaakkalukku chellum poathu … Continue reading "maekkap rakachiyam…………"
maekkap rakachiyam…………

 

மேக்-அப் போட்ட அடுத்த நிமிடமே வெளியே கிளம்பி விடாதீர்கள். போக வேண்டிய நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே மேக்-அப் போட்டு விடுங்கள். அப்போது தான், அது சருமத்துடன் சேர்ந்து அழகாக, இயற்கையாக தெரியும். இல்லாவிட்டால், பெயின்ட் அடித்த மாதிரி தெரியும்.
 
மேக்-அப் போட்டு கொள்வது பெரிய விஷயமில்லை. அது, உங்கள் முகத்தில் உள்ள சின்ன, சின்ன குறைகளை தீர்ப்பதாக இருக்க வேண்டும். எனவே, முதலில் அதை கற்றுக் கொள்ளுங்கள். விழாக்களுக்கு செல்லும் போது மட்டுமே பிளஷர் உபயோகிக்கவும். மற்றபடி, முக்கிய இடங்களுக்கு செல்லும் 
 
போது, அது வேண்டாம். செயற்கை கண் இமைகளை உபயோகிக்க வேண்டாம். மஸ்காரா உபயோகிப்பதை பழக்கிக் கொள்ளுங்கள். அதுவும் நிறைய கோட் தடவினால், செயற்கையாக தெரியும். ஒன்றிரண்டு கோட்டோடு நிறுத்திக் கொள்ளவும். தலையை விரித்தபடி விட்டுக் கொண்டு போகாதீர்கள். 
 
சிறிய கூந்தலாக இருந்தாலும், அதை குதிரை வாலாகக் கட்டிக் கொண்டோ, ப்ரென்ச் பின்னல் போட்டுக் கொண்டோ போனால், அழகோ அழகு.
 
மேக்-அப் போட்ட அடுத்த நிமிடமே வெளியே கிளம்பி விடாதீர்கள். போக வேண்டிய நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே மேக்-அப் போட்டு விடுங்கள். அப்போது தான், அது சருமத்துடன் சேர்ந்து அழகாக, இயற்கையாக தெரியும். இல்லாவிட்டால், பெயின்ட் அடித்த மாதிரி தெரியும். 
 
மேக்-அப் போடும் போது, நல்ல இயற்கை வெளிச்சத்தில் போடவும். லைட் வெளிச்சத்தில் உங்கள் மேக்-அப் சரியாக தெரியாமல், வேறு விதமாக காட்டக் கூடும். மேக்-அப் போட்டு முடித்த பிறகு, குளிர்ந்த ஜூஸ் ஏதாவது குடியுங்கள் அது, உடலை குளிர்ச்சியாக வைக்கும். இன்டர்வியூ போகிற போது, உடைகளுக்கு மேட்ச்சாக ஐஷேடோ மற்றும் மஸ்காரா உபயோகிப்பதை தவிர்க்கவும். அது, உங்களை நவ நாகரிக பெண்ணாக காட்டினாலும், 
 
அந்த இடத்திற்கு ஒத்து வராது.
 
பகல் வேலைகளில் முக்கிய இடங்களுக்குச் செல்லும் போது, அளவுக்கதிகமாக மேக்-அப் வேண்டாம். அதே மாதிரி அனைத்து மேக்-அப் பொருட்களும், சன் ஸ்கிரீன் கலந்ததாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். இப்போது ஐலைனர், மஸ்காரா, லிப்ஸ்டிக் என எல்லாமே, வாட்டர் புரூப்' ரகத்தில் கிடைக்கின்றன. இவற்றை உபயோகித்தால், வியர்வையோ, தண்ணீரோ பட்டால், மேக்-அப் கலையாமல், அப்படியே இருக்கும். 
 
பவுண்டேஷன், காம்பேக்ட் பவுடர் போன்றவற்றை, கையில் வைத்திருங்கள். நீங்கள் போன காரியம் தாமதமாகும் என தெரிந்தால், மறுபடி ஒருமுறை டச்-அப் செய்து கொள்ளலாம். வேலை முடிந்து, அங்கிருந்து நேராக ஏதேனும் முக்கிய இடத்திற்கோ, தியேட்டருக்கோ விரைய வேண்டுமா மேக்-அப் செய்ய நேரமில்லையா கவலை வேண்டாம். கண்களுக்கு மட்டுமாவது மேக்-அப் போட்டுக் கொள்ளுங்கள் புத்துணர்வோடு தெரிவீர்கள்

 

Popular Post

Tips