மன அழுத்தம் தரும் மாதவிலக்கு

  deenaej penkalai kalankavaikkum pirachchinaiyaaka uruveduththuk kondirukkirathu, cheerarra maathavilakku thontharavukal. pallik kalviyai mudiththuviddu, mana aluththam neraintha kalloori kalvikkul adiyeduththu vaikkum aeraalamaana penkal cheerarra maathavilakku thontharavaal avathippadduk kondirukkiraarkal.   – athika valiyudan maatha vilakku uthiram veliyaavathu!   – athika naadkal veliyaavathu!   – athika uthirappoakku aerpaduvathu!   – maathakkanakkil maathavilakku aerpadaamalae iruppathu! …   ippadi aeraalamaana … Continue reading "mana aluththam tharum maathavilakku"
mana aluththam tharum maathavilakku

 

டீன்ஏஜ் பெண்களை கலங்கவைக்கும் பிரச்சினையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது, சீரற்ற மாதவிலக்கு தொந்தரவுகள். பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு, மன அழுத்தம் நிறைந்த கல்லூரி கல்விக்குள் அடியெடுத்து வைக்கும் ஏராளமான பெண்கள் சீரற்ற மாதவிலக்கு தொந்தரவால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
 
– அதிக வலியுடன் மாத விலக்கு உதிரம் வெளியாவது!
 
– அதிக நாட்கள் வெளியாவது!
 
– அதிக உதிரப்போக்கு ஏற்படுவது!
 
– மாதக்கணக்கில் மாதவிலக்கு ஏற்படாமலே இருப்பது! …
 
இப்படி ஏராளமான பிரச்சினைகள்.
 
இவைகளுக்கெல்லாம் என்ன காரணம்?
 
* அதிக மனஅழுத்தம், உடல் எடையில் ஏற்படும் மாற்றம், அதிக உடற்பயிற்சி செய்தல்.
 
* மூளையின் தலைமை சுரப்பியிலோ, முன் கழுத்தின் கேடய சுரப்பியிலோ கோளாறு ஏற்படுதல்.
 
* சிறுநீரகங்களுக்கு மேலே இருக்கும் அண்ணீரகச் சுரப்பி மற்றும் கருப்பை- சினைப்பை- பிறப்பு உறுப்பு பாதைகளில் நோய்கள் ஏற்படுதல்.
 
* அதிகமான சளித் தொல்லை, பயம், திடீர் மன அதிர்ச்சி ஏற்படுதல். .. போன்ற பல காரணங்களால் மாதவிலக்கு தொந்தரவுகள் ஏற்படுகின்றன. கருப்பை, சினைப்பையில் நோயோ, நோய்த் தொற்றோ இருந்தால் சில மாதங்கள் தொடர்ந்து மாதவிலக்கு ஏற்படாது.

Popular Post

Tips