இன்ப அதிர்ச்சி அளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா [ video ]

inthiya kirikked ane ulaka koappai iruthip poaddiyil venru chaampiyan paddaththai perrathum naadaenkum rachikarkalidam makilchchi vellam karaipuran dodiyathu. paddaachukal vediththum, ineppukal vineyoakiththum intha verriyai rachikarkal urchaakamaaka kondaadinaarkal.     thalainakar daelliyil mukkiya chanthippukalil aeraalamaana rachikarkal thirandu nenru kirikked verriyai kondaadinaarkal. ai.di.oa. chavuk pakuthiyilum rachikarkal ineppukalai vine yoakiththu kirikked veerarkalai vaalththi koashamidduk kondirunthanar.     appoathu avarkalukku … Continue reading "inpa athirchchi aliththa kaankiras thalaivar choaneyaa [ video ]"
inpa athirchchi aliththa kaankiras thalaivar choaneyaa [ video ]
இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றதும் நாடெங்கும் ரசிகர்களிடம் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண் டோடியது. பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வினியோகித்தும் இந்த வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

 

  தலைநகர் டெல்லியில் முக்கிய சந்திப்புகளில் ஏராளமான ரசிகர்கள் திரண்டு நின்று கிரிக்கெட் வெற்றியை கொண்டாடினார்கள். ஐ.டி.ஓ. சவுக் பகுதியிலும் ரசிகர்கள் இனிப்புகளை வினி யோகித்து கிரிக்கெட் வீரர்களை வாழ்த்தி கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.

 

  அப்போது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு காரில் வந்து இறங்கினார். நள்ளிரவில் திடீரென சோனியா வந்ததை அங்கு இருந்தவர்களல் நம்ப முடிய வில்லை.

 

  சோனியாவுடன் 2 கார்களில் பாதுகாப்பு படையினரும் வந்திருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் பொதுமக்களை தடுக்க வில்லை. இதனால் உற்சாகம் அடைந்த கிரிக்கெட் ரசிகர்கள் சோனியாவுக்கு கை கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

 

  அவர்களிடம் சோனியா, நாம் ஜெயித்து விட்டோம் என்று மகிழ்ச்சியுடன் கூறி கை குலுக்கினார். சுமார் 30 நிமிடம் அந்த பகுதியில் இருந்தவர்களுடன் சோனியா கை குலுக்கி இந்திய வெற்றியை கொண்டாடினார். சோனியாவும் மக்களோடு மக்களாக இருந்து கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடும் தகவல் பரவியதால் நூற்றுக் கணக்கானவர்கள் குவிந்து விட்டனர்.

 

  இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு இருந்தவர்களிடம் வணக்கம் தெரிவித்து விட்டு சோனியா வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். சோனியா அங்கு இருந்த 30 நிமிடமும் ஏராளமானவர்கள் செல்போனில் அவரை போட்டோ எடுத்தனர்.

 

 

 

 

Popular Post

Tips