பாகற்காய் குழம்பு

thaevaiyaana poarudkal:   periya venkaayam – 2 thakkaali – 2 paavakkaay – kaal kiloa uppu – thaevaikkaerpa karivaeppilai – 10 ilai milakaay thool – thaevaikkaerpa thaenkaay paal – thaevaikkaerpa puli – thaevaikkaerpa   cheymurai: 1. paavakkaayai chuththam cheythu unkalukku vaendiya alavil & vadivaththil veddi edunkal. kachappai chakippathu kadinam enel chiriya thundukalaaka iruppathu nallathu. 2. venkaayam, … Continue reading "paakarkaay kulampu"
paakarkaay kulampu

தேவையான பொருட்கள்:

 

பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பாவக்காய் - கால் கிலோ
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - 10 இலை
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
தேங்காய் பால் - தேவைக்கேற்ப
புளி - தேவைக்கேற்ப

 

செய்முறை:

1. பாவக்காயை சுத்தம் செய்து உங்களுக்கு வேண்டிய அளவில் & வடிவத்தில் வெட்டி எடுங்கள். கசப்பை சகிப்பது கடினம் எனில் சிறிய துண்டுகளாக இருப்பது நல்லது.
2. வெங்காயம், மிளகாய், தக்காளியை பொடியாக வெட்டிக்கொள்ளுங்கள்.
3. ஒரு சட்டியில் பழப்புளி நீரை ஊற்றி அடுப்பை பற்ற வையுங்கள்.
4. வெட்டிய பாவக்காய், வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, மற்றும் உப்பு சேர்த்து வேக வையுங்கள்.
5. பாவக்காய் பாதி வெந்ததும், தக்காளியை சேருங்கள்.
6. பாவக்காய் வெந்ததும், பாலை சேர்த்து கொதி நிலை வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

 

குறிப்புகள்:
* தேங்காய் உடைக்கும் போது அதில் வரும் நீரை எடுத்து பாவக்காயை வேக வைத்தால் கசப்பு குறையும்.

Popular Post

Tips