கோவா வறை

thaevaiyaanavai :   koavaa/ muddaikoas – 1/2 kiloa venkaayam – periyathu 2/ chiriyathu 8, 9 cheththal/ chivappu milakaay vaththal – 8, 9 enney – 3 spoon kaduku – kojcham karivaeppilai – kojcham uppu – thaevaiyaana alavu thaenkaay thuruval – kojcham cheymurai :   1. koavaa/muddaikoasai poadiyaaka narukki/cheevik kollavum. pin narukkiya koasai paaththiraththil poaddu thanneeril kaluviya … Continue reading "koavaa varai"
koavaa varai


தேவையானவை :

 

கோவா/ முட்டைகோஸ் - 1/2 கிலோ
வெங்காயம் - பெரியது 2/ சிறியது 8, 9
செத்தல்/ சிவப்பு மிளகாய் வத்தல் - 8, 9
எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - கொஞ்சம்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - கொஞ்சம்

செய்முறை :

 

1. கோவா/முட்டைகோஸை பொடியாக நறுக்கி/சீவிக் கொள்ளவும். பின் நறுக்கிய கோஸை பாத்திரத்தில் போட்டு தண்ணீரில் கழுவிய பின் தண்ணீரை வடித்து விடவும்.

2. பின் அடுப்பில் அந்தப் பாத்திரத்தை மூடி வைத்து கோஸை வேகவைக்க வேண்டும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. கோஸில் ஒட்டியிருக்கும் தண்ணீரே போதும். அவ்வப்போது கிளறி விட்டுக் கொள்ளவும்.

3. கோஸ் வேகும் நேரத்தில் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

4. பின் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய் வத்தல் போட்டுத் தாளிக்கவும்.

5. கோஸ் வெந்தவுடன் தாளித்த கலவையும், உப்பும், தேங்காய்துருவலும் சேர்த்து நன்றாகக் கிளறவேண்டும். சிறிது நேரம் மூடி வைத்து பின் பரிமாறினால் சுவையாக இருக்கும்.

குறிப்பு :

  காரப்பிரியர்கள் கொஞ்சம் மிளகாய்ப் பொடியையும் உப்புடன் சேர்த்துச் சமைக்கலாம்.

Popular Post

Tips