இளநரை போக்க மூலிகை எண்ணெய்…

  inraiya naveena yukaththil 15 vayathu muthalae aan pen irupaalarukkum thalaimudi naraiththu vidukirathu.  aanaal nam munnoorkal 60 vayathu varai thalaimudi naraikkaamalum mudi uthiraamalum adarntha kaechaththudan  vaalnthaarkal.  atharkuk kaaranam avarkalin unavumuraiyum, palakka valakkankalumae.  inraiya unavu muraiyil naavin chuvaikkaaka chaththarra unavukalae athikam chaappidukinranar.    poathaakkuraikku enneyil poariththa unavukal, pathappaduththappadda unavukal, kulirooddappadda unavukal poanravarrai unpathaal  ajeranak koalaaru aerpaddu … Continue reading "ilanarai poakka moolikai enney…"
ilanarai poakka moolikai enney…

 

இன்றைய நவீன யுகத்தில் 15 வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது.  ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன்  வாழ்ந்தார்கள்.  அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே.  இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். 
 
போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால்  அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது.
 
இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும்.  மேலும்,  அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும்.
 
பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது.  மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
 
வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும்.  ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது.  சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது.
 
உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
 
முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.
 
இளநரை போக்க மூலிகை எண்ணெய்
 
தேங்காய் எண்ணெய் - 100 மி.லி.
சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 இணுக்கு
நெல்லி வற்றல் - 10 கிராம்
வெட்டிவேர் - 5 கிராம்
 
இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால்  இளநரை நீங்கும்.

Popular Post

Tips