கருவேப்பிலை!

  karuvaeppilaiyai chamaiyalukku maddum payanpaduththaamal athai unavil chaerththu undaal, udal aarokkiyaththukku nallathu.   thorru nooyai thadukkum aarral karuvaeppilaikku undu. karuvaeppilaiyai undaal kan paarvai koalaarukal nammai anukaathu.   puratham, irumpuchchaththu, paasparas, koluppu, kaarpoahadraed, vaiddamin ae, vaiddamin chi ithil nerampa ullathu.   vaayppunnai kunamaakkum. pal eerukalai valuppaduththum. vayiru thodarpaana chikkalkalai viraddi adikkum valimai karuvaeppilaikku nerampavae undu.   … Continue reading "karuvaeppilai!"
karuvaeppilai!

 

கருவேப்பிலையை சமையலுக்கு மட்டும் பயன்படுத்தாமல் அதை உணவில் சேர்த்து உண்டால், உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
 
தொற்று நோயை தடுக்கும் ஆற்றல் கருவேப்பிலைக்கு உண்டு. கருவேப்பிலையை உண்டால் கண் பார்வை கோளாறுகள் நம்மை அணுகாது.
 
புரதம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, வைட்டமின் சி இதில் நிரம்ப உள்ளது.
 
வாய்ப்புண்ணை குணமாக்கும். பல் ஈறுகளை வலுப்படுத்தும். வயிறு தொடர்பான சிக்கல்களை விரட்டி அடிக்கும் வலிமை கருவேப்பிலைக்கு நிரம்பவே உண்டு.
 
மலச்சிக்கலை போக்கும். ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். பேதியை கட்டுப்படுத்தும். பித்தத்தை மாற்றி வாந்தியை தடுத்து வயிற்று இரைச்சலை தொலைக்கும்.
 
பசி எடுக்கவில்லையா? ஜீரண மந்தமா? கருவேப்பிலையை வறுத்து மிளகு, சீரகம், சுக்கு இவற்றை பொடி செய்து உப்பு சேர்த்து சோறுடன் பிசைந்து உண்ணுங்கள். பசி உங்களை கூவி அழைக்கும்

Popular Post

Tips