சுவையான முட்டை ப்ரைடு ரைஸ்

  thaevaiyaana poarudkal :   paachumathi arichi – arai kiloa   muddai – aaru   venkaayam – irandu   pachchaimilakaay – naanku   thuruviya kaarad – ½ kap   kudaimilakaay – ½ kap   ijchi, poondu nachukkiyathu – 2 dee spoon   milakuththool – 1 dee spoon   munthirip paruppu – 10   uppuththool – … Continue reading "chuvaiyaana muddai praidu rais"
chuvaiyaana muddai praidu rais

 

தேவையான பொருட்கள் :
 
பாசுமதி அரிசி - அரை கிலோ
 
முட்டை - ஆறு
 
வெங்காயம் - இரண்டு
 
பச்சைமிளகாய் - நான்கு
 
துருவிய காரட் – ½ கப்
 
குடைமிளகாய் - ½ கப்
 
இஞ்சி, பூண்டு நசுக்கியது – 2 டீ ஸ்பூன்
 
மிளகுத்தூள் – 1 டீ ஸ்பூன்
 
முந்திரிப் பருப்பு – 10
 
உப்புத்தூள் – 2 டீ ஸ்பூன்
 
கொத்தமல்லி - அரை கட்டு
 
எண்ணெய் - நான்கு டேபிள் ஸ்பூன்
 
முட்டை ப்ரைடு ரைஸ் செய்முறை :
 
முதல் பாசுமதி அரிசியை உப்பை சேர்த்து வேகவைத்து உதிரி உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளவும்.
 
அடுப்பில் அகலாமான வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி நன்கு சூடுப்படுத்தவும். அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு மிளகாய், இஞ்சி பூண்டு அகியவற்றை போட்டு சிறிது வதக்கவும். அதை தொடர்ந்து குடைமிளகாய் போட்டு சிறிது வதக்கவும்.
 
இந்த கலவையுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி சிறு சிறு துண்டுகளாகும் வரை நன்கு கிளறவும்.
 
இதில் உப்புத்தூள், மிளகுத்தூள் போட்டு கிளறவும். பிறகு வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். அப்போது அடுப்பை வேகமாக எறிய விடவும்.நன்றாக மிக்ஸ் ஆகி வாசனை வந்த உடன் அடுப்பை நிறுத்தி விடலாம்.
 
இதன்மேல் முந்திரிப்பருப்பு, துருவிய காரட், கொத்தமல்லி தூவி பரிமாறவும். சத்தான சுவையான முட்டை ப்ரைடு ரைஸ் தயார். சாதம் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இதுபோல செய்து கொடுத்தால் ஆர்வத்துடன் சாப்பிடுவர்.

Popular Post

Tips