மன்னார் எழுத்தாளர்கள் பேரவை

kadantha 09-01-2011 (jayirrukkilamai) kolumpil onru koodiya mannaar maavadda eluththaalarkal “mannaar eluththaalarkal paeravai” enum amaippai uruvaakki ullanar.   mannaar maavadda eluththaalarkalai orunkinaippathum, avarkalin aakkankalai panmukappaduththuvathum, noolkalai veliyiduvathum ivvamaippin pirathaana kurikkoalaakum. ikkooddaththil kalanthu konda mannaar thamilchchankath thalaivar arudpaneyaalar thamilnaechan adikalaar “mannaar maavaddaththil kalai ilakkiyak kalakankal pala amaikkappada vaendum. ivvamaippukalin thodar cheyarpaadae mannaar maavaddaththai kalai ilakkiya valarchchiyai nookki … Continue reading "mannaar eluththaalarkal paeravai"
mannaar eluththaalarkal paeravai
கடந்த 09-01-2011 (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் ஒன்று கூடிய மன்னார் மாவட்ட எழுத்தாளர்கள் “மன்னார் எழுத்தாளர்கள் பேரவை” எனும் அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

 

மன்னார் மாவட்ட எழுத்தாளர்களை ஒருங்கிணைப்பதும், அவர்களின் ஆக்கங்களை பன்முகப்படுத்துவதும், நூல்களை வெளியிடுவதும் இவ்வமைப்பின் பிரதான குறிக்கோளாகும். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மன்னார் தமிழ்ச்சங்கத் தலைவர் அருட்பணியாளர் தமிழ்நேசன் அடிகளார் “மன்னார் மாவட்டத்தில் கலை இலக்கியக் கழகங்கள் பல அமைக்கப்பட வேண்டும். இவ்வமைப்புகளின் தொடர் செயற்பாடே மன்னார் மாவட்டத்தை கலை இலக்கிய வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்லும்” என்று கருத்துத் தெரிவித்தார். “மன்னார் எழுத்தாளர்கள் பேரவை” க்கு தெரிவு செய்யப் பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கீழ்வருமாறு

 

தலைவர்: திரு. மன்னார் அமுதன்
உபதலைவர்: திரு. சிவானந்தன் (நாவலாசிரியர்)
செயலாளர்: திரு. எஸ்.ஏ.உதயன் (நாவலாசிரியர்)
உபசெயலாளர்: திரு .அமல்ராஜ்(கவிஞர்)
பொருளாளர்: திரு. S.H.M.ஷிஹார் (கவிஞர்)
போஷகர்: அருட்பணியாளர் தமிழ்நேசன் (தலைவர் - தமிழ்ச்சங்கம்)
மேலும் நிர்வாக உறுப்பினர்களாக கலாபூஷணம். அ.அந்தோனி முத்து மற்றும் கலாபூஷணம் மார்க் அண்டனி ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவானது அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை செயற்படும். மீண்டும் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டது.

 

Popular Post

Tips