காலைத்தூக்கம்….

kaalaiththookkam….. koddum pane ooraiyae uraiya vaikka poarvaikkul churundu thoonkum athikaalai thaandiya thookkam enna chukam. ennaith thuyilaluppa cholli vaiththa naeraththirku alarum kadikaaraththaiyum, chila nemidankal pinthinaalum nooru kaelvi kaedkum maelathikaariyaiyum thiddith theerththavaaru athikaalaith thookkaththai thuranthu paraparappaana anraiya naalirkul kaaladi eduththu vaippaen jayirruk kilamai vidumuraiyil nanraakath thoonkalaam enra aaruthalil, aanaal ennavo theriyavillai jayirrukkilamaikalil maddum paneyum poalivathillai enakkum athikaalai … Continue reading "kaalaiththookkam…."
kaalaiththookkam….

காலைத்தூக்கம்.....

கொட்டும் பனி ஊரையே உறைய வைக்க

போர்வைக்குள் சுருண்டு தூங்கும்

அதிகாலை தாண்டிய தூக்கம் என்ன சுகம்.

என்னைத் துயிலெழுப்ப சொல்லி வைத்த

நேரத்திற்கு அலறும் கடிகாரத்தையும்,

சில நிமிடங்கள் பிந்தினாலும் நூறு

கேள்வி கேட்கும் மேலதிகாரியையும்

திட்டித் தீர்த்தவாறு

அதிகாலைத் தூக்கத்தை துறந்து

பரபரப்பான அன்றைய நாளிற்குள்

காலடி எடுத்து வைப்பேன்

ஞாயிற்றுக் கிழமை விடுமுறையில்

நன்றாகத் தூங்கலாம் என்ற ஆறுதலில்,

ஆனால் என்னவோ தெரியவில்லை

ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பனியும் பொழிவதில்லை

எனக்கும் அதிகாலை தாண்டி தூக்கமும் வருவதில்லை.

 

Popular Post

Tips