உங்க லிப்ஸ்டிக் தரமானதா? உதடு பத்திரம் !

  uthaddirku lipsdik poaduvathu inraikku paeshanaakividdathu. tharamaana lipsdik upayoakiththaal maddumae uthadukalai paathukaakka mudiyum. illaiyenel uthadukal karuththum varandum poayvidum. muthanmuraiyaaka lipsdik upayoakikkappoakireerkalaa? itho lipsdik poadum murai parri aaloachanai koorukinranar alakiyal nepunarkal.   oruvar upayoakiththa lipsdikkukalai marravarkal upayoakikka koodaathu ithanaal thorrukkirumikal thaakkum. enavae thaneyaaka lipsdik vaanki upayoakikka vaendum enru arivuruththiyullanar alakiyal nepunarkal.   neraththirku aerra lipsdik   … Continue reading "unka lipsdik tharamaanathaa? uthadu paththiram !"
unka lipsdik tharamaanathaa? uthadu paththiram !

 

உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது இன்றைக்கு பேஷனாகிவிட்டது. தரமான லிப்ஸ்டிக் உபயோகித்தால் மட்டுமே உதடுகளை பாதுகாக்க முடியும். இல்லையெனில் உதடுகள் கருத்தும் வறண்டும் போய்விடும். முதன்முறையாக லிப்ஸ்டிக் உபயோகிக்கப்போகிறீர்களா? இதோ லிப்ஸ்டிக் போடும் முறை பற்றி ஆலோசனை கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள்.
 
ஒருவர் உபயோகித்த லிப்ஸ்டிக்குகளை மற்றவர்கள் உபயோகிக்க கூடாது இதனால் தொற்றுக்கிருமிகள் தாக்கும். எனவே தனியாக லிப்ஸ்டிக் வாங்கி உபயோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.
 
நிறத்திற்கு ஏற்ற லிப்ஸ்டிக்
 
தற்போது இளஞ்சிவப்பு முதல் பிரவுன், வைலெட் மற்றும் கறுப்பு வரை பல்வேறு வர்ணங்களில் கடைகளில் லிப்ஸ்டிக்குகள் கிடைக்கின்றன. நம்முடைய நிறத்திற்கு எந்த நிறம் பொருந்துமோ அதற்கேற்ப வர்ணங்களை தேர்வு செய்து உபயோகிக்க வேண்டும்.
 
முதலில் அவுட் லைன் வரைந்து விட்டு பின்னர் லிப்ஸ்டிக் போடலாம். அப்பொழுதுதான் உதடுகளின் வடிவத்திற்கு ஏற்ப லிப்ஸ்டிக் பொருந்தும்.
 
நீண்டநேரம் நீடிக்க
 
லிப்ஸ்டிக் போடுவதற்கு முன் ஐஸ்களால் ஒத்தடம் கொடுத்தால் லிப்ஸ்டிக் நீண்டநேரம் இருக்கும்.லிப் பேஸ் பூசிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் போட்டாலும் நீண்டநேரத்திற்கு இருக்கும்.
 
உதடுகளுக்கு மேக் அப் போடும் முன் முதலில் பவுண்டேசன் போட்டுவிட்டு பின்னர் லிப்ஸ்டிக் போட்டால் நீண்டநேரத்திற்கு கலையாமல் இருக்கும்.
 
கவனம் தேவை
 
லாங்லாஸ்டிங் பூசினால் 5 முதல் 8 மணி நேரம் நீடிக்கும். ஆழமான நிறத்தைத் தரும், எளிதில் அழிந்துவிடாது. ஆனால் உதடுகளை உலர வைக்கும். உதடுகள் உலர்ந்துவிட்டதைப் போல் தோன்றினால் கன்டிஷனர் தடவலாம்.
 
திரவ வடிவில் இருக்கும் லிக்விடை சிறிய பிரஷ் கொண்டு உதட்டில் பூசலாம் நீண்ட நேரத்திற்கு அழியாமல் இருக்கும். பளபளப்பு தேவையென்றால் இதன் மேல் லிப் கிளாஸ் தடவலாம். இது விரைவில் உலர்ந்துவிடுவதால் உதடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இவற்றைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். 
 
உதடு உலர்வதை தடுக்க
 
மெட்டாலிக் தடவினால் லேசான நிறத்தைத் தரும். வெளிச்சத்தில் மின்னும் தன்மை கொண்டது. அதிக அளவில் நிறத்தை விரும்பினால், மேட் லிப்ஸ்டிக்கை உதடுகளில் பூசிய பின்னர் இதைத் தடவலாம்.
 
ஆழமான மற்றும் அதிக அளவில் நிறத்தைப் பெற சிறந்தது மேட் லிப்°டிக். இதில் பளபளப்பு இருக்காது, அதே நேரத்தில் உதடுகளை உலர வைக்கும் தன்மை கொண்டது. உதடுகள் உலாராமல் இருக்க முதலில் மாய்ஸ்சுரைஸரைத் பூசி அதன் பிறகு மேட் லிப்ஸ்டிக் தடவ வேண்டும்.
 
பளபளப்பான லிப் கிளாஸ்
 
லிப் கிளாஸ் இது பளபளப்பானது, அதே நேரத்தில் மிகக் குறைந்த அளவில் நிறத்தை தரக் கூடியது. லேசான நிறம் பெற சிறந்தது. ஆனால் அதிக நேரம் நீடிக்காது.
 
லிப்ஸ்டிக் உபயோகித்து பழக்கம் இல்லாதவர்கள் அலர்ஜி ஏற்படும் என்று அஞ்சுபவர்கள் பல வர்ணங்களில் கிடைக்கும் வாஸலின்களை உபயோகிக்கலாம். அதேபோல் லிப் கிளாஸ் போடலாம்.
 
லிப் பென்ஸிலால் உதடுகளில் அவுட்லைன் பூசிவிட்டு லிப் கிளாஸ் தடவினால், நீண்ட நேரம் நீடிக்கும். லிப் பென்ஸில் உதடுகளின் வடிவத்தை எடுத்துக்காட்டி மேலும் அழகாக்குகிறது .
 
லிப் கிரீம் அதிக அளவில் கன்டிஷனரும், மாய்ஸ்சுரைஸரும் உள்ளன. உதடுகளுக்கு மென்மையான தோற்றத்தைத் தரக் கூடியது, அதே நேரத்தில் அதிக அளவில் நிறமும் பெறலாம். உதடுகளின் வெளிப்புறத்தை லிப் பென்ஸிலால் வரைந்துவிட்டு க்ரீம் லிப்ஸ்டிக்கைத் தடவினால் உதட்டைவிட்டு வெளியே வராது.
 
உதடுகளில் போட்ட லிப்ஸ்டிக்குகளை நீக்க பேஷ்வாஸ் அல்லது தேங்காய் எண்ணெயை தடவலாம்.
 

Popular Post

Tips