எண்ணெய் பசை கூந்தலா? இதைப் படிங்க !

  koonthalai enney pachai udaiyathu, varanda koonthal, chaathaarana koonthal ena vakaippaduththalaam. enney pachai koonthal irunthaal pichupichuppu thanmaiyudaiyudan kaanappadum. ithanaal mukaththilum enney vadiyum. ithanaal poadukum, mukaththil parukkalum aerpadukirathu. koonthalin enney pachaiyaip poakka iyarkaiyil kidaikkum poarudkalai payanpaduththalaam enkinranar alakiyal nepunarkal.   oru kap thanneeril oru elumichchaiyai pilinthu oorravum. intha thanneerai theliththu thalaiyil ooravaikkavum. elumichchaiyil ulla amilam koonthalin … Continue reading "enney pachai koonthalaa? ithaip padinka !"
enney pachai koonthalaa? ithaip padinka !

 

கூந்தலை எண்ணெய் பசை உடையது, வறண்ட கூந்தல், சாதாரண கூந்தல் என வகைப்படுத்தலாம். எண்ணெய் பசை கூந்தல் இருந்தால் பிசுபிசுப்பு தன்மையுடையுடன் காணப்படும். இதனால் முகத்திலும் எண்ணெய் வடியும். இதனால் பொடுகும், முகத்தில் பருக்களும் ஏற்படுகிறது. கூந்தலின் எண்ணெய் பசையைப் போக்க இயற்கையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
 
ஒரு கப் தண்ணீரில் ஒரு எலுமிச்சையை பிழிந்து ஊற்றவும். இந்த தண்ணீரை தெளித்து தலையில் ஊறவைக்கவும். எலுமிச்சையில் உள்ள அமிலம் கூந்தலின் எண்ணெய் பசை தன்மையை சீராக்குகிறது. அரைமணி நேரம் ஊறியபின்னர் கூந்தலை ஷாம்பு போட்டு அலசவும்.
 
வெள்ளை வினிகரை இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து அதனை ஒரு கப் தண்ணீரில் ஊற்றி தலையில் ஊறவைக்கவும். 20 நிமிடம் ஊறவைத்து அலச எண்ணெய் பசை நீங்கும்.
 
தேங்காய் எண்ணெயை மெதுவாக சூடேற்றவும். வெதுவெதுப்பான சூழலில் கூந்தலின் வேர்கால்களில் படுமாறு தேய்த்து மசாஜ் செய்யவும். பின்னர் கூந்தலை அலச எண்ணெய் பசை சரியாகும்.
 
புதினா இலையை நன்கு கொதிக்க வைத்து அதனை ரோஸ் வாட்டரில் கலந்து தலைக்கு தேய்த்து ஊறவைக்கவும். பின்னர் தலைக்கு ஷாம்பு போட்டு அலச கூந்தல் இயற்கை எண்ணெய் தன்மையோடு பளபளப்பாக இருக்கும்.
 
டீ இலையை நன்கு கொதிக்க வைத்து அதனை தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளிக்கலாம். கற்றாலை ஜெல்லுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து ஊறவைத்து மைல்டான ஷாம்பு தேய்த்து குளிக்கலாம்.
 
வைட்டமின் உணவுகள்
 
கூந்தலின் எண்ணெய் பசை சீராக இருக்க வைட்டமின்கள் பி3, பி5, எ, சி, இ போன்ற உணவுகளை சேர்த்துக்கொள்ளவேண்டும். துத்தநாகம் கூந்தலின் எண்ணெய் பசை தன்மையை சீராக்கும். பழங்கள், காய்கறிகள், தயிர் போன்றவை கூந்தலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். பொடுகுத் தொல்லையை நீக்கும். அனைத்தையும் விட தண்ணீர் சரியான அளவில் பருகுவதும் கூந்தலை சீராக பராமரிக்க உதவும்.

Popular Post

Tips