நடிகைக பூஜா

nallaa vara vaendiya poannu’ enru elloaraalum virumpappadukira nadikaikalilpoojavum oruvar. ivarai rendae varikalil adakka vaendum enraal ippadi chollalaam. ‘adankaatha alaku, aanaalum aarppaaddamillaamal palaku   oru nadikai enra entha panthaavum illaamal kaaykari vaanka thaanae maarkkeddukku poavathil thodanki, avvappoathu anaathai aachiramankalukku poay chaevai cheyvathu varai oru nadikaikkuriya ilakkanankal ethuvumae illaathavar intha pooja.   ivarukkum aaryaavukkum Kadhal. viraivil iruvarukkum … Continue reading "nadikaika pooja"
nadikaika pooja
நல்லா வர வேண்டிய பொண்ணு' என்று எல்லோராலும் விரும்பப்படுகிற நடிகைகளில்பூஜாவும் ஒருவர். இவரை ரெண்டே வரிகளில் அடக்க வேண்டும் என்றால் இப்படி சொல்லலாம். 'அடங்காத அழகு, ஆனாலும் ஆர்ப்பாட்டமில்லாமல் பழகு

 

ஒரு நடிகை என்ற எந்த பந்தாவும் இல்லாமல் காய்கறி வாங்க தானே மார்க்கெட்டுக்கு போவதில் தொடங்கி, அவ்வப்போது அநாதை ஆசிரமங்களுக்கு போய் சேவை செய்வது வரை ஒரு நடிகைக்குரிய இலக்கணங்கள் எதுவுமே இல்லாதவர் இந்த பூஜா.

 

இவருக்கும் ஆர்யாவுக்கும் காதல். விரைவில் இருவருக்கும் திருமணம் என்றெல்லாம் காசிப் எழுதி கைகள் ஓய்ந்து போய்விட்டது கிசுகிசு எழுத்தாளர்களுக்கு. ஆனால் இந்த முறை ஆர்யா இல்லாமல் பூஜாவை மட்டுமே குறிவைத்து பரவியது இன்னொரு செய்தி.

 

இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே திருமணம் ஆகிவிட்டதாம். இந்த தகவலை ரகசியமாக வைத்திருக்கிறாராம் பூஜா. சமீபத்தில் இவரை நடிக்க அழைத்த ஒரு இயக்குனரிடம் இனிமேல் நடிக்கப் போவதில்லை என்றாராம் அவர். அதற்கு பூஜா சொன்ன காரணம் இந்த கல்யாண செய்திதான். ஒருவேளை இது உண்மையாக இருக்கிற பட்சத்தில் அவரது கணவர் யார்? எந்த நாட்டில் தொழிலதிபராக இருக்கிறார் போன்ற விபரங்களை இனிமேல்தான் தோண்டியெடுக்க வேண்டும்!

 

 

Popular Post

Tips