அழகைக் கூட்ட பொருத்தமான உள்ளாடை அணியுங்கள்!!

  alavu chariyillaatha ullaadaikal anevathan moolam penkalin alaku mankippoavathaaka aadai alankaara nepunarkalum, aayvaalarkalum theriviththullanar. penkal poaruththamarra ‘praa’ vai anevathaal avarkalin maarpakankal paathikkum apaayam ullathaakavum aayvaalarkal echcharikkinranar.   inkilaanthaich chaerntha ullaadai virpanai neruvanam penkal payanpaduththum ullaadaikal kuriththu kanakkeduppu nadaththiyathu. intha kanakkeduppil 2000 penkal pankaerranar. avarkalidam ullaadaikal kuriththu kaelvi kaedkappaddana. antha kanakkeduppil palvaeru unmaikal theriyavanthana.     … Continue reading "alakaik koodda poaruththamaana ullaadai aneyunkal!!"
alakaik koodda poaruththamaana ullaadai aneyunkal!!

 

அளவு சரியில்லாத உள்ளாடைகள் அணிவதன் மூலம் பெண்களின் அழகு மங்கிப்போவதாக ஆடை அலங்கார நிபுணர்களும், ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர். பெண்கள் பொருத்தமற்ற ‘ப்ரா’ வை அணிவதால் அவர்களின் மார்பகங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
 
இங்கிலாந்தைச் சேர்ந்த உள்ளாடை விற்பனை நிறுவனம் பெண்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தியது. இந்த கணக்கெடுப்பில் 2000 பெண்கள் பங்கேற்றனர். அவர்களிடம் உள்ளாடைகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டன.
அந்த கணக்கெடுப்பில் பல்வேறு உண்மைகள் தெரியவந்தன.
 
 
பிரிட்டனில் பெண்களில் பலர், ஷாப்பிங் செய்யும் ஆசையில் பிராக்களின் அளவு, வடிவம் என்பவற்றை கருத்தில் கொள்ளாமல் அவற்றை வாங்குவதாகவும் பின்னர் அவற்றை பயன்படுத்தாமல் ஒதுக்குவதாகவும் தெரியவந்துள்ளது.
 
இதன்படி, பிரிட்டன் பெண்களிடம் சராசரியாக 9 பிராக்கள் உள்ளதாகவும், ஆனால் அதில் பாதிக்கு மேல் பயன்படுத்தப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரிட்டனில் சுமார் 15.6 கோடி பிராக்கள் வீணாக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
 
 
மூன்றில் ஒரு பங்கு பெண்கள், பொருத்தமற்ற அளவு காரணமாக தாம் அவற்றை நிராகரிப்பதாக கூறியுள்ளனர். பல பெண்கள் தாம் தேர்வு செய்யும் பிராக்கள் உடலுக்குப் பொருத்தமில்லாமல் உள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதேசமயம், அசவுகரியமாக, பொருத்தமற்ற துணிகளால் உருவாக்குதல், அணியும்போது அழகில்லாமல் தோற்றத்தை ஏற்படுத்துதல் போன்ற காரணங்களால் பிராக்களை ஒதுக்குவதாகவும் சில பெண்கள் கூறியுள்ளனர்.
 
பத்தில் ஒரு சதவிகித பெண்களுக்கு அவர்களுக்குத் தேவையான பிராக்களின் சரியான அளவு தெரியவில்லை. மூன்றில் ஒரு பங்கினர் சரியாக பிராவின் அளவை அளவிடாதவர்களாக உள்ளனர். தற்போது தாம் அணியும் பிராக்கள் பொருத்தமாக இல்லை என நான்கில் ஒருவர் தெரிவிக்கின்றனர்.
 
74 சதவிகிதத்தினர் பிராக்களை புதிதாக வாங்கும்போது அளவு பொருந்துமா என பரிசோதிப்பதில்லையாம். ஏனெனில் அவர்கள் மார்பகங்களை சரியாக அளவிடப்படுவது குறித்து சங்கடப்படுகின்றனராம். மேலும் 25 சதவிகிதத்தினர் தமது மார்பகங்கள் பெரிதாக தோற்றமளிக்கச் செய்வதற்காக மிகவும் சிறிய அளவுடைய பிராக்களை அணிவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
 
57 சதவிகித பெண்கள் விளையாட்டுகளில் ஈடுபடும்போது தாம் அணியும் பிரா பொருத்தமானதா என்பது குறித்து கருத்தில் கொள்வதில்லை எனத் தெரிவித்துள்ளனர். அதிகமான பெண்கள் ஒரே அளவுடைய 3 பிராக்களை சுழற்சி முறையில் அணிவதுடன், பாதிக்கும் மேற்பட்டோர் வெவ்வேறு அளவுடைய பல வகையான பிராக்களை அணிவதாக தெரிவித்துள்ளனர்.
 
இதுக்குறித்து ஆய்வு நடத்திய உள்ளாடை நிறுவனத்தினர், விளையாட்டில் ஈடுபட்டிருப்பவர்கள், அதிகமாக வேலை செய்யக்கூடியவர்கள் பொருந்தாத பிராக்களை அணிவதால், மார்பகங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கின்றனர். பெரும்பாலான பெண்கள் பொருந்தாத பிராக்களை வாங்கி பணத்தை வீணடிப்பதாகவும் கூறியுள்ளனர்.

Popular Post

Tips