குருபகவான் தட்சிணாமூர்த்தி வழிபாடு

  kurupakavaan thadchinaamoorththi valipaadu :   kuruvai valipadum mun chollavaendiya thuthi ;   kallaalin pudaiyamarnthu naanmarai aarankamuthar karravaelvi, vallaarkal naalvarukkum vaakkirantha pooranamaay maraikku appalaay, ellaamaay allathumaay irunthanai irunthapadi irunthu kaaddich, chollaamar chonnavarai nenaiyaamal nenaiththu pavath thodakkai velvaam.   thiruvilaiyaadarpuraanam.   aalamar enach chollakkoodiya kurupakavaanai maerkanda thuthiyai paaraayanam cheythu valipadupavarkalukku kurupakavaanai kalvi,janam. poanravarrai tharuvaar enpathu kankoodu.  … Continue reading "kurupakavaan thadchinaamoorththi valipaadu"
kurupakavaan thadchinaamoorththi valipaadu

 

குருபகவான் தட்சிணாமூர்த்தி வழிபாடு :
 
குருவை வழிபடும் முன் சொல்லவேண்டிய துதி ;
 
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறங்கமுதற் கற்றவேள்வி,
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பலாய்,
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்,
சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைத்து பவத் தொடக்கை வெல்வாம்.
 
திருவிளையாடற்புராணம்.
 
ஆலமர் எனச் சொல்லக்கூடிய குருபகவானை மேற்கண்ட துதியை பாராயணம் செய்து வழிபடுபவர்களுக்கு குருபகவானை கல்வி,ஞானம். போன்றவற்றை தருவார் என்பது கண்கூடு. 
 
குருபகவான் பற்றி உப தகவல்கள் ; 
 
1.குணம் ;ஆண். 
2. பதவி ;அமைச்சர் மந்திரி 
3.திசை ;ஈசான்யம் 
4.உலோகம் ;சிலேத்துமம் .நகை,பொன் ,தங்கம் 
5.உணவு ;கடலை 
6.தூயதீபம் ;ஆம்பல் 
7.மலர்கள் ;முல்லை மலர்,புஷ்பராகம் 
8.வாகனம் ;யானை 
9.வலிமை ;பகல் நேரம் 
10.உறுப்பு ;வயிற்றுப்பகுதி 
11.சுவை ;இனிப்பு 
12.வடிவம் ; நீள்சதுரம் 
13.ஜாதி-பிராமணர் 
14.உடலமைப்பு -உயரமானவர் 
15.கடவுள் – பிரம்மா
16.மொழி -கன்னடம், தெலுங்கு
17.நாடி -வாத நாடி.
18. நிறம்-மஞ்சள் 
மேற்கண்ட 18 ம் குரு தட்சிணாமூர்த்தி ஆட்சி செய்பவை அல்லது பிடித்தவை ஆக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்
 
ஜாதகத்தில் குருபகவான் ; 
 
ஜோதிடத்தில் குருபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 பார்வையாக பார்ப்பதாக கூறுகிறது. "குரு பார்த்தால் கோடி நன்மையுண்டு" என்பது பொது விதியாகும்.
 
சிவாலயத்தில் சிவனுக்கு வலப்புறம் இருக்கும் குரு பகவான் எனப்படும் தட்சிணாமூர்த்தியை மஞ்சள் ஆடை,கொண்டைக்கடலை மாலை கோர்த்து முல்லைப்பூ அணிவித்து நேருக்கு நேராக நின்று வழிபடுங்கள்.
 
திருமணம் போன்ற சுபகாரீயங்கள் குரு அருளால்தான் நடைபெறுகிறது.
 
உங்கள் வாழ்வில் ஏற்றம் பெற வியாழக்கிழமையில் குருஓரையில் சிவாலய தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள்.
 
எல்லா வளமும் நலமும் பெறுங்கள் நன்றி

Popular Post

Tips