கணபதி ஹோமம்

  kanapathi hoamam   oru kudumpaththin nalam vaendi muthalil cheyya vaendiyathu kanapathi hoamam aakum. kanapathi hoamaththirku poari, aval, chaththumaavu, kolukkaddai, appam, arukampul, karumputhi thundu, erukkampoo aakiyavai avachiyamaakum.   hoamam cheythu vaikka puroki tharum udan jaepam, thiyaanam muthaliyavarraich cheyya naanku purokitharkalum mika avachiyam. hoamaththirku mun cheypavarraip poorvaankam enrum pin cheypavarrai uthraankam enrum cholvaarkal.    muthalil hoamakundam, … Continue reading "kanapathi hoamam"
kanapathi hoamam

 

கணபதி ஹோமம்
 
ஒரு குடும்பத்தின் நலம் வேண்டி முதலில் செய்ய வேண்டியது கணபதி ஹோமம் ஆகும். கணபதி ஹோமத்திற்கு பொரி, அவல், சத்துமாவு, கொழுக்கட்டை, அப்பம், அறுகம்புல், கரும்புதி துண்டு, எருக்கம்பூ ஆகியவை அவசியமாகும்.
 
ஹோமம் செய்து வைக்க புரோகி தரும் உடன் ஜெபம், தியானம் முதலியவற்றைச் செய்ய நான்கு புரோகிதர்களும் மிக அவசியம். ஹோமத்திற்கு முன் செய்பவற்றைப் பூர்வாங்கம் என்றும் பின் செய்பவற்றை உத்ராங்கம் என்றும் சொல்வார்கள். 
 
முதலில் ஹோமகுண்டம், கணபதி சன்னதி புண்யாஹவசன கடம், ஆவாஹன கலசம், நைவேத்யம் போன்ற ஹோமத்திற்கான பொருள்களை தயார் செய்து முறைப்படி வைத்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தினர் கூடத்தில் அமர்ந்து கொண்டு புரோகிதர் மூலம் கணபதி ஹோமம் செய்ய வேண்டும். செய்முறை : 
 
1. சங்கல்பம் : இந்த நாளில் இந்த நலன் வேண்டி இந்த ஹோமத்தைச் செய்கிறேன் என்று சபதம் செய்து கொள்ளவும். 
 
2. தானம் : ஏழைகள், பெரியவர்களுக்கு தானம் செய்து அனுமதியைப் பெற வேண்டும்.
 
3. ஜப, தியானம் 
 
4. புண்யாஹவசனம் கணபதியின் மூல மந்திரங்களால் ஒரு கலசத்தில் ஆவாஹனம் செய்து ஆசனமிட்ட குடத்தை வைத்து வருணனை ஆவாஹனம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதற்கான மந்திரங்களை ஜபம் செய்து பிறகு அந்த ஜலத்தால் அனைவரையும், அனைத்தையும் மந்திரசுத்தி செய்ய வேண்டும்.
 
5. ஹோமம் : ஹோம குண்டத்தினருகில் மந்திரம் மூலமாக அந்தந்த பொருட்களை அந்தந்த இடத்தில் வைத்து பிரதிஷ்டை, சுத்தம் செய்து, அக்னியை குண்டத்தில் சேர்த்து பிரம்மா முதல் அனைத்து தேவதைகளுக்கான மந்திரத்துடன் நெய், சமித்து, தர்ப்பம் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும்.
 
பிறகு கணபதிக்கு மந்திரங்களாலும் திரவியங்களாலும் ஹோமம் செய்து, மந்திர கோஷங்களுடன் பூர்ணாஹூதி ஹோமம் செய்ய வேண்டும். இதையடுத்து கணபதிக்கு பூஜை செய்து நைவேத்யம் அனைத்தையும் வைக்க வேண்டும். கணபதி ஆவாஹன கலசத்தை இருப்பிடம் சேர்த்து அந்த தண்ணீரால் தங்களைப் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் இனிதே முடிந்தவுடன் மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும்.
 
 

Popular Post

Tips