மோதகம்

  thaevaiyaanavai    pachcharichi- arai kiloa  vellam- arai kiloa  kadalaipparuppu- 300 kiraam  aelakkaay- 7  thaenkaay- 1  chukku- chirithalavu.   cheymurai:    ooravaiththa pachcharichiyai maavaaka idiththu vaanaliyil varukka vaendum. pinnar kadalaipparuppai irandu manenaeram ooravaichchu avikka vaendum. vellaththai thool cheythu thaenkaayththuruval, aelakkaay poadi aakiyavarrudan chaerkka vaendum. thaenkaay thuruvalai neyyiliddu varuththu thayaaraa vaiththuviddu, aviththa kadalaipparuppai mikchiyiliddu laechaa araikka … Continue reading "mothakam"
mothakam

 

தேவையானவை
 
 பச்சரிசி- அரை கிலோ
 வெல்லம்- அரை கிலோ
 கடலைப்பருப்பு- 300 கிராம்
 ஏலக்காய்- 7
 தேங்காய்- 1
 சுக்கு- சிறிதளவு.
 
செய்முறை: 
 
ஊறவைத்த பச்சரிசியை மாவாக இடித்து வாணலியில் வறுக்க வேண்டும். பின்னர் கடலைப்பருப்பை இரண்டு மணிநேரம் ஊறவைச்சு அவிக்க வேண்டும். வெல்லத்தை தூள் செய்து தேங்காய்த்துருவல், ஏலக்காய் பொடி ஆகியவற்றுடன் சேர்க்க வேண்டும். தேங்காய் துருவலை நெய்யிலிட்டு வறுத்து தயாரா வைத்துவிட்டு, அவித்த கடலைப்பருப்பை மிக்சியிலிட்டு லேசா அரைக்க வேண்டும். மிக்சி இல்லாவிட்டால் கையால் பிசைஞ்சுக்கொள்ளலாம். 
 
பின்பு பிசைந்த கடலைப்பருப்பு, வெல்லத்தூள், ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி ஆகியவற்றை சேர்த்து வறுத்த தேங்காயுடன் போட வேண்டும். திரவ நிலைக்கு வந்தவுடன், இந்த கலவையை வாணலியில் இட்டு சிறிது நேரம் கிண்டினால் லேகியம் போல் ஆகும். இதை "பூரணம்' என்பார்கள்.
 
பச்சரிசி மாவில் கொஞ்சம் நெய் சேர்த்து சூடு தண்ணீர் விட்டு பிசையுங்க. இதை சப்பாத்தி உருண்டை போல உருட்டி, உருண்டையை உள்ளங்கையிலோ அல்லது சுத்தமான பாலிதீன் பேப்பரிலோ வைச்சு தட்டி அதன் நடுவே பூரணத்தை ஒரு ஸ்பூன் வைத்து நன்றாக உருட்ட வேண்டும். இதை நெய் தடவிய இட்லி தட்டில் வைத்து அவித்தால் சூடான, சுவையான விநாயகருக்கு பிடித்த மோதகம் ரெடி.
 

Popular Post

Tips