சனிப்பிரதோஷம்

  chivaperumaanukku ukantha virathankalil pirathoshamum mika mukkiyamaana onraakum. pirathosha valipaadu chakala sowpaakkiyankalaiyum thara koodiyathu. kulanthai illaathavarkalukku puththira paakkiyam kidaikkavum,thirumanamaakaatha kannep penkalukku viraivil thirumanam nadaiperavum,varumai neenki chelvam perukavum,nooykal neenkavum,eduththuk konda kaariyankalil verri kidaikkavum intha pirathosha valipaadu uthavukirathu.     ovvooru maathamum valarpiraiyil oru pirathoshamum thaeypiraiyil oru pirathoshamum ena maatham irumurai pirathosham varum. pirathosham enpathu aelarai naalikai … Continue reading "chaneppirathosham"
chaneppirathosham

 

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் மிக முக்கியமான ஒன்றாகும். பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர கூடியது. குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கவும்,திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவும்,வறுமை நீங்கி செல்வம் பெருகவும்,நோய்கள் நீங்கவும்,எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கவும் இந்த பிரதோஷ வழிபாடு உதவுகிறது.  
 
ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமும் என மாதம் இருமுறை பிரதோஷம் வரும். பிரதோஷம் என்பது ஏழரை நாழிகை மட்டும்தான்.
 
திரயோதசி நாளில் சூரியன் மறையும் மாலை வேளையில் சூரியன் மறைவதற்கு முன்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும், அதாவது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பிரதோஷ காலமாகும்.  
 
இந்த நேரம் சிவனுக்கு  மிகவும் உகந்த நேரம் ஆகும். தேவர்களின் துன்பம் போக்க விஷத்தை உண்ட சிவபெருமான், அனைத்து உயிர்களும் துன்பம் நீங்கி வாழ கயிலாய மலையில் பிரதோஷ காலத்தில் தான் நந்திதேவரின் இரு கொம்புகளுக்கும் இடையே திருநடனமாடி மகிழ்வித்தார்.
 
அதனால் பிரதோஷ காலத்தில்௦  தவறாமல் சிவாலயத்திற்குச் சென்று நந்தி தேவருக்கு சிறப்பு வழிபாடு செய்து சிவபெருமானை நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் சிவ தரிசனம் செய்வது சிறப்பு.   பிரதோஷ தினத்தன்று (மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை) சிவாலயத்தில் வழிபாடு செய்தால் நாம் வேண்டிய வரம் கிடைக்கும்.
 
மேலும் பிரதோஷ தினத்தன்று சிவபுராணம்,சிவகவசம் படிப்பது நம் முன்ஜென்ம சாபங்களை,பாவங்களை போக்கும்.       பிரதோஷ நாட்களில் சிவாலயத்தை பின்வரும் முறையில் தான் வலம் வரவேண்டும். சிவாலயத்தில் நந்தி பெருமானிடமிருந்து புறப்பட்டு, இடப்புறமாகச் சென்று சண்டிகேசுவரரை வணங்கி, பின் அங்கிருந்து வந்த வழியே திரும்பி வந்து, நந்திதேவரை வணங்கி, பின் வலப்புறமாக கோமுகி வரை வந்து, பின்  மீண்டும் வந்த வழியே திரும்பி நந்திதேவரின் கொம்புகளுக்கிடையே சென்று சிவபெருமானை வணங்க வேண்டும். இப்படி மூன்று முறை வணங்க வேண்டும்.  
 
இந்த முறைக்கு சோம சூக்த பிரதட்சணம் என்று பெயர். பொதுவாக வளர்பிறையிலோ, தேய்பிறையிலோ, மாலை வேளையில் திரயோதசி வந்தால் அது மஹாபிரதோஷம் ஆகும். அதுவே சனிக்கிழமைகளில் வந்தால் அது சனிப் பிரதோஷமாகும்.   சனி பிரதோஷம் வருடத்திற்கு இரு முறை மட்டுமே வரும்.
 
அந்த நாட்களில் விரதம் இருந்து ( உப்பு, காரம்,புளிப்பு) சேர்க்காமல் சிவஆலயம் சென்றால் வேண்டிய வரம் கிடைக்கும்.இந்த சோம சூக்த பிரதட்சணம் செய்வதால் ஒரு வருடத்திற்கு சிவ  ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ தினத்தில் செய்தால் ஐந்து வருடத்திற்கு சிவ ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்த பலனும் கிடைக்கும்.   

Popular Post

Tips