முட்டை அவிப்பது எப்படி?

muddai avippathu enpathu oru periya kalai. nampinaalum, nampaaddilum athu thaan unmai. athikam aviththaalum palanellai, chirithu naeraththil eduththaalum pachchai vaadai poakaathu. athikam avippathaal chuvaiyil viththiyaacham varappoavathillai. aanaal chaththu kurainthuvidum. muddaiyai aviththo/poariththo chaappidalaam. chilar appadiyae pachchaiyaakavum chaappiduvaarkal. athu anaivarukkum poarunthaathu. thavira aviththa muddaiyil thaan proddin chaththin thaakkam athikamaaka irukkum enkiraarkal.   oru paaththiraththil neerai oorri, athil muddaiyai … Continue reading "muddai avippathu eppadi?"
muddai avippathu eppadi?

முட்டை அவிப்பது என்பது ஒரு பெரிய கலை. நம்பினாலும், நம்பாட்டிலும் அது தான் உண்மை. அதிகம் அவித்தாலும் பலனில்லை, சிறிது நேரத்தில் எடுத்தாலும் பச்சை வாடை போகாது. அதிகம் அவிப்பதால் சுவையில் வித்தியாசம் வரப்போவதில்லை. ஆனால் சத்து குறைந்துவிடும். முட்டையை அவித்தோ/பொரித்தோ சாப்பிடலாம். சிலர் அப்படியே பச்சையாகவும் சாப்பிடுவார்கள். அது அனைவருக்கும் பொருந்தாது. தவிர அவித்த முட்டையில் தான் ப்ரோட்டின் சத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.

 

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் முட்டையை போட்டு அவிக்க வேண்டும். (முட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்தால், அறை வெப்பத்திற்கு வந்த பின்னர் தான் அவிக்க வேண்டும். )நீர் கொதிக்க தொடங்கியதும், அரை அவியலாக வேண்டும் எனில் 3 நிமிடங்களிலும், நன்றாக அவிய வேண்டும் எனில் 9 நிமிடங்களிலும் எடுக்கலாம்.

 

அரை அவியல் எனில், 3 நிமிடத்தில் வெளியே எடுத்து cup இல் வைக்கவும். மேலிருக்கும் முட்டை ஓட்டை மெதுவாக உடைத்தெடுக்கவும். அதில் உப்புடன் வேண்டிய தூள்களை சேர்த்து சாப்பிடலாம்.

 

தூள்கள்:

மிளகுதூள்
மிளகு தூள் + சீரகத்தூள்
சீரகத்தூள் + செத்தல்தூள்

 

நன்றாக அவித்த முட்டை எனில், 9 நிமிடங்களில் வெளியே எடுத்ததும், வெந்நீரை வெளியே கொட்டிவிட்டு, புதிய நீர் சேருங்கள். 2 நிமிடத்தில் ஓட்டை உடைக்கலாம்.

Popular Post

Tips