லிங்காஷ்டகம் -தமிழில்

linkaashdakam -thamilil  naan mukan  thirumaal  poojai  cheylinkam   thooya chol  pukal  perum paerelil  linkam    piravip  perunthuyar  poakkidum  linkam    vanakkam  aerra  chathaachiva  linkam         kaamanai  eriththa  paerelil  linkam     iraavanan  karvam  adakkiya  linkam    vali  vali  munevarkal  valipaadu  linkam     vanakkam  aerra  chathaachiva  linkam         thivya  manam  … Continue reading "linkaashdakam -thamilil"
linkaashdakam -thamilil

லிங்காஷ்டகம் -தமிழில் 


நான் முகன்  திருமால்  பூஜை  செய்லிங்கம்
 
தூய சொல்  புகழ்  பெரும் பேரெழில்  லிங்கம் 
 
பிறவிப்  பெருந்துயர்  போக்கிடும்  லிங்கம் 
 
வணக்கம்  ஏற்ற  சதாசிவ  லிங்கம்  
 
 
 
காமனை  எரித்த  பேரெழில்  லிங்கம் 
  
இராவணன்  கர்வம்  அடக்கிய  லிங்கம் 
 
வழி  வழி  முனிவர்கள்  வழிபாடு  லிங்கம்  
 
வணக்கம்  ஏற்ற  சதாசிவ  லிங்கம்  
 
 
 
திவ்ய  மணம்  பல கமழ்கின்ற  லிங்கம் 
 
சித்தம்  தெளிவிக்கும்  சித்தர்கள்  லிங்கம் 
 
தேவரும்  அசுரரும்  வணங்கிடும்  லிங்கம் 
 
வணக்கம்  ஏற்ற  சதாசிவ  லிங்கம்  
 

படம் எடுத்தாடும்  பாம்பனை   லிங்கம் 

 
கனகமும்  நவமணி  ஒளித்திடும் லிங்கம் 
 
தட்சனின் யாகத்தை  அழித்திட்ட  லிங்கம் 
 
வணக்கம்  ஏற்ற  சதாசிவ  லிங்கம்  
 
 
 
குங்குமம்  சந்தானம்  பொழிந்திடும்  லிங்கம் 
 
பங்கய  மலர்களைச்   சூடிடும்  லிங்கம் 
 
வந்ததொரு   பாவத்தைப்  போக்கிடும்  லிங்கம் 
 
வணக்கம்  ஏற்ற  சதாசிவ  லிங்கம்  
 
 
 
அசுரர்கள்  அங்கம்  போற்றிடும்  லிங்கம் 
 
அன்பர்கள்  பக்தியை  ஏற்றிடும்  லிங்கம் 
 
கதிரவன்  கோடி சுடர்  மிகு  லிங்கம் 
 
வணக்கம்  ஏற்ற  சதாசிவ  லிங்கம் 
 
 
 
எட்டிதழ்  மலர்களும்  சுற்றிடும்  லிங்கம் 
 
 
எல்லாப்  பிறப்பிற்கும்  காரண  லிங்கம் 
 
அஷ்ட  தரித்திரம்  அகற்றிடும்  லிங்கம் 
 
வணக்கம்  ஏற்ற  சதாசிவ  லிங்கம்  
 
 

வியாழனும்  தேவரும்  போற்றிடும்  லிங்கம் 
 
வில்வமதை  மலர்  எனக் கொளும் லிங்கம் 
 
தன்னோடு   பிறரையும்  காத்திடும்  லிங்கம் 
 
 
வணக்கம்  ஏற்ற  சதாசிவ  லிங்கம் 

 

Popular Post

Tips