பைரவர் வழிபாடு பலன்கள்…

maayap pirapparuththu makimaikal pala tharum sree pairavaraik kuriththa ovvooru valipaaddukkum kurippidda palankal undu.  jayirrukkilamai : raaku kaalaththil ruthraapishakam, vadai maalai chaarri valipaddaal thirumanappaeru kidaikkum. kadan vaanki vaddiyum, achalum kadda mudiyaamal thavippavarkal jayirrukkilamai raaku kaalaththil sree kaala pairavarukku munthirip paruppu maalai kaddi, punuku chaarri, ven poankal naivaeththiyam iddu valipaddu piraarththanai cheythaal nalam kidaikkum.  thinkadkilamai : vilvaarchchanai … Continue reading "pairavar valipaadu palankal…"
pairavar valipaadu palankal…

மாயப் பிறப்பறுத்து மகிமைகள் பல தரும் ஸ்ரீ பைரவரைக் குறித்த ஒவ்வொரு வழிபாட்டுக்கும் குறிப்பிட்ட பலன்கள் உண்டு. ஞாயிற்றுக்கிழமை : ராகு காலத்தில் ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் திருமணப்பேறு கிடைக்கும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் ஸ்ரீ கால பைரவருக்கு முந்திரிப் பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நைவேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும். திங்கட்கிழமை : வில்வார்ச்சனை செய்திட சிவனருள் கிட்டும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும். செவ்வாய்க்கிழமை : மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்பப் பெறலாம். புதன்கிழமை : நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும். வியாழக்கிழமை : விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி, சூனியம் விலகும். வெள்ளிக்கிழமை : மாலையில் வில்வ அர்ச்சனை செய்து வந்தால் செல்வப்பேறு கிடைக்கும். சனிக்கிழமை : சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே சனிக்கிழமை அன்று இவரை பிரத்தேயமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச்சனி விலகி நல்லவை நடக்கும். கால பைரவர் உடலில் பூமியைத் தாங்கும் எட்டு நாகங்களும் மாலையாக இருந்து அலங்கரிப்பதால் இவரை வழிபட்டால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம். அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷம் அன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும். தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணை, விளக்கெண்ணை, தேங்காய் எண்ணை, நல்லெண்ணை, பசு நெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம். ஸ்ரீ பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவவை வணங்கி “கால பைரவ அஷ்டகம்'' படித்து வந்தால் எதிரிகளை அழித்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்ட நாள் வாழலாம்.

Popular Post

Tips