புரட்டாசி சனி விரத மகிமை

chanekkilamaikalil poathuvaaka perumaalukkum virathamiruppathu valakkamthaan. ithil, puradadaachi maatha chanekkilamaikkena oru vichaesham irukkirathu. puraddaachi chanekkilamaiyil thaan chanepakavaan avathariththaar.   athan kaaranamaaka, avaraal aerpadum kedupalankal kuraiya kaakkum, kadavulaana thirumaalai  vanankuvathu valakkaththila vanthathu. jathakaththil chane nalla nelaiyil irunthaal mikachchirappaana palankalae kidaikkum. chaneyaip poal koduppaarummillai. keduppaarum illai enru cholvaarkal.   ovvooru chanekkilamaiyilum viramirukka mudiyaathavarkal, puraddaachichchane naadkalaal vichaeshamaaka viratham anushdippar. … Continue reading "puraddaachi chane viratha makimai"
puraddaachi chane viratha makimai

சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கும் விரதமிருப்பது வழக்கம்தான். இதில், புரடடாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.

 


அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும், கடவுளான திருமாலை  வணங்குவது வழக்கத்தில வந்தது. ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருந்தால் மிகச்சிறப்பான பலன்களே கிடைக்கும். சனியைப் போல் கொடுப்பாரும்மில்லை. கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள்.

 

ஒவ்வொரு சனிக்கிழமையிலும் விரமிருக்க முடியாதவர்கள், புரட்டாசிச்சனி நாட்களால் விசேஷமாக விரதம் அனுஷ்டிப்பர். சனீஸ்வரனுக்குரிய தானியம் எள்ளு,வர்ணம் கறுப்பு, வாகனம் காகம் எனவே கரியப்பட்டினை அவனுக்கு சாத்துதலும், எள்ளுச்சாதம் நிவேதனம் செய்தலும், காகத்திற்கு உணவிடுதலும் சனிக்கிழமைகளில் செய்ய வேண்டிய காரியங்களாகும்.
உணவிலே நல்லெண்ணை மற்றும் எள்ளுப்பதார்த்தங்கள் சேர்த்தல் நன்று. இத்தினத்திலே எள்ளு, கறுப்புத்துணி, நல்லெண்ணை முதலியவற்றை தானம் செய்வதால் சனி தோஷத்தை நீக்கலாம். செப்பு பாத்திரத்தில் நல்லெண்ணை விட்டு தமது முகத்தை அதில் பார்த்துவிட்டு தானம் செய்தல் வேண்டும்.
   
  ஏனைய விரதங்களுக்கு எண்ணை முழுக்கு விலக்கப்பட்ட ஒன்று. ஆனால் சனீஸ்வர விரதத்திற்கு எண்ணெய் தேய்து நீராடல் வேண்டும். கறுப்புத்துணியில் எள்ளுப்பொட்டலம் கட்டி அதனை சிறிய மண்சட்டியில் (சிட்டி) வைத்து நல்லெண்ணை விட்டு அதனைத் தீபமாக ஏற்றி சனிதோஷங்களுக்குப் பிரீதி செய்யலாம்.
இது முழுதாக எரிந்து நன்றாக நீராகும் வரை நிறைய நல்லெண்ணை விட வேண்டும். அரைகுறையாக எரிந்து பொருமுவது கூடாது.

 

Popular Post

Tips