மச்சங்களைப் பற்றி ….

poana chivappanukkalin velippaadu enru machchaththaip parrich cholkiraarkal. aanaal jothidaththaip poaruththavarai machchankal mukkiya idam vakikkinrana. mael uthadu marrum keel uthadukalil irukkum machchankal charva chaathaaranamaakap poay paecha vaikkum.  machchankalil ullankaiyil irukkum machcham mika mukkiyamaanathaakum. ellaa nalla kedda palankalaiyum udanadiyaaka alikkak koodiyathu intha ullankai machcham. chila aapaththukkalaiyum uruvaakkum. chundu viralil puthan maeddil machcham irunthaal kalvith thadaipadum. koodaa nadpu … Continue reading "machchankalaip parri …."
machchankalaip parri ….

போன சிவப்பணுக்களின் வெளிப்பாடு என்று மச்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள். ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை மச்சங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. மேல் உதடு மற்றும் கீழ் உதடுகளில் இருக்கும் மச்சங்கள் சர்வ சாதாரணமாகப் பொய் பேச வைக்கும். 

மச்சங்களில் உள்ளங்கையில் இருக்கும் மச்சம் மிக முக்கியமானதாகும். எல்லா நல்ல கெட்ட பலன்களையும் உடனடியாக அளிக்கக் கூடியது இந்த உள்ளங்கை மச்சம். சில ஆபத்துக்களையும் உருவாக்கும்.சுண்டு விரலில் புதன் மேட்டில் மச்சம் இருந்தால் கல்வித் தடைபடும். கூடா நட்பு உண்டாகும். கூட்டு சேர்வது சரியாக இருக்காது.மோதிர விரலுக்கு கீழே இருக்கும் சூரிய மேட்டில் மச்சம் இருந்தால் அரசால் கண்டம் ஏற்படும். அதாவது ஜெயிலுக்குப் போவது போன்ற நிலை உண்டாகும்.நடு விரலில் மச்சம் இருந்தால் திடீர் மரணம், கடத்தப்படுதல், தீரா நோய், கோர மரணம், ஊரை விட்டு ஒதுக்கப்படுவது, உண்ணா நோன்பு இருந்து இறப்பது போன்றவை ஏற்படும்.ஆட்காட்டி விரலுக்கு கீழே குரு மேட்டில் மச்சம் இருந்தால் சர்வ சாதரணமாக நீதி நெறியை மீறுதல், குரு பத்னியை தொட்டுவிடுதல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள்.

 

மனசாட்சிக்கு அப்பார்பட்ட செயல்களை செய்வார்கள்.குரு மேட்டில் மச்சம் இருந்தால் பெரிய பதவிகளில் இருப்பார்கள், திடீரென தூக்கி எறியப்படுவார்கள்.சுண்டு விரலுக்குக் கீழே இருப்பது புதன் மேடு. அதற்குக் கீழே இருப்பது செவ்வாய் மேடு. செவ்வாய் மேட்டில், உள் செவ்வாய் மேடு, வெளிச் செவ்வாய் மேடு என்று இரண்டு வகைப்படும்.உள்செவ்வாய் மேட்டில் கரும்புள்ளி இருந்தால் திடீர் யோகம் உண்டாகும். ஆனால் அதனை அனுபவிக்க துணைவியர் இல்லை என்று புலம்ப வைக்கும்.வெளிச் செவ்வாயில் கரும்புள்ளி இருந்தால் அரசு வழியிலோ அல்லது வழக்குகளிலோ நமது சொத்துகள் பறிபோகும். அதாவது சாலை அமைக்க நிலத்தை அரசு எடுத்துக் கொள்ளுதல், வழக்கில் எதிராளிக்குச் சாதகமாக தீர்ப்பு அமைந்து சொத்து கைவிட்டுப் போதல் போன்றவை ஏற்படும்.கட்டை விரலுக்குக் கீழே இருக்கும் மேடு சுக்கிரன் மேடு. ரொம்ப முக்கியமான மேடு. சுக்கிர மேட்டில் மெல்லிய கோடுகள் இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும். புள்ளிகள் இல்லாமல் இருப்பதுதான் நல்லது.புள்ளி இருந்தால் அது ஒழுக்கக் கேடு. பலருடன் செல்வது, பல பெண்களிடம் செல்வது போன்றவை ஏற்படும். உடலுறவில் பல்வேறு தவறான உணர்ச்சிகளைக் கொண்டிருப்பார்கள்.சுக்கிரன் மேட்டிற்கும், வெளிச் செவ்வாய் மேட்டிற்கும் கீழே நடுவே இருப்பது சந்திரன் மேடு. அதாவது உள்ளங்கையின் சுண்டு விரலுக்குக் கீழே கடைசியான மூலைப் பகுதிதான் சந்திரன் மேடு. சந்திரன் மேட்டில் புள்ளிகள் இருந்தால் மனநலம் குன்றியக் குழந்தைகள், நரம்புக் கோளாறு போன்றவை ஏற்படும்.

கரும்புள்ளிகள் அவ்வப்போது ஏற்படுமா?ஆம். சிலருக்கு பிறக்கும்போதே மச்சங்கள் ஏற்படுவதில்லை. புள்ளிகள் இயற்கையின் விதிமுறைகளை முன்கூட்டியே எடுத்துக் கூறுவதாகும்.இங்கு வந்தால் இது நடக்கும், இங்கு மச்சம் வந்தால் இந்த யோகம் கிட்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.சிலருக்கு பிறக்கும்போதே மச்சம் இருக்கும். சிலருக்கு ஒரு சில காலக்கட்டத்தில் மச்சம் தோன்றும். சனி, ராகு சேர்ந்திருந்து, சனி திசையில் ராகு புத்தி வந்தால் கரும் புள்ளிகள் தோன்றும்.அதை நாம் தெரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் சிலதை கூட்டி, சிலதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.உடலின் பிறப்பகுதியைக் காட்டிலும் உள்ளங்கையில் ஏற்படக் கூடிய கரும்புள்ளிகள் பொரும்பாலும் வாழ்க்கையில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.கருப்பு புள்ளிகள் முதலில் கருப்பாகத் தோன்றாது. பழுப்பு நிறுத்தில்தான் தோன்றும். அப்போது அது நல்ல பலன்களைத் தரும். அதேப்போல உள்ளங்கையில் இருக்கும் வெண் புள்ளிகள் அதிக பணப் புழக்கம், அறிவுக் கூர்மை, எதையும் திட்டமிட்டுச் செய்யும் திறனைத் தெளிவுப்படுத்தும்.பழுப்பு, வெண் புள்ளிகள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் தோன்றும் புள்ளிகள் நல்லது. ஆரஞ்சு புள்ளிகளால் திடீர் சொத்து வாங்குவது போன்றவை ஏற்படும்.சிவப்பாக இருப்பவர்களின் கைகளில்தான் ஆரஞ்சு நிற புள்ளிகள் தெரியும். நமக்கு இருந்தாலும் அது பழுப்பு நிறத்திற்கும் ஆரஞ்சுக்கும் வித்தியாசம் தெரியாததால் கண்டுபிடிக்க முடியாது. கை ரேகையில் பெண்களுக்கு இடது கை, ஆண்களுக்கு வலது கை என்பது போல மச்சங்களிலும் உண்டா?ஆம், மச்சங்களுக்கும் இது பொருந்தும். பெண்களுக்கு இடது கையில் இருக்கும் மச்சத்தினால் அதிக பாதிப்பும், ஆண்களுக்கு வலது கையில் இருக்கும் மச்சத்தினால் அதிக பாதிப்பும் ஏற்படும்.முகத்தில் பொதுவாக மச்சம் இல்லாமல் இருப்பது நல்லது என்று மச்ச சாஸ்திரம் கூறுகிறது. பொதுவாக உதடு, கண், புருவம், இமைகளுக்கு மேலே மச்சம் இருக்கக் கூடாது என்று கூறுகிறது.நெற்றிக்கு மேலே தலையில் எல்லாம் மச்சம் இருக்கலாம். ஆனால் முன் தலையில் இருப்பதை விட, பின் தலையில் இருக்கலாம்.

சிலருக்கு கருப்பையும், பச்சையையும் கலந்த மச்சங்கள் இருக்கும். அது பொதுவாக உடல் பகுதியில் உண்டாகும். அதுபோன்ற மச்சங்கள் உடலின் பின்பகுதியில் ஏற்படுவது நல்லது.என் தாத்தா சில ஜாதகங்களைப் பார்த்ததும் இந்த பெண்ணுக்கு நாக தோஷம் இருக்கிறது என்பார். அந்த பெற்றோர்கள் இல்லையே, எந்த தோஷமும் இல்லை என்று சொன்னார்களே என்று கூறுவார்கள். அதற்கு, முட்டியில் இருந்து தொடைக்கு இடைப்பட்ட பகுதியில் பச்சையும், கருப்பும் கலந்த நிறத்தில் பாம்பு படம் எடுத்தது போன்ற ஒரு மச்சம் இருக்குமே என்று சொல்வார்கள். அவர்களிடம் கேட்டால் அது உண்மையாக இருக்கும்.லக்னாதிபதியுடன் ராகு சேர்ந்தாலோ சந்திரனுடன் ராகு சேர்ந்தாலோ, பூர்வ புண்ணியாதிபதியுடன் ராகு சேர்ந்தாலோ இதெல்லாம் ஏற்படும்.பொதுவாக கிரகங்களில் பார்த்தால் ராகு, கேதுதான் மச்சங்களை வெளிப்படுத்தும் கிரகங்கள். அடுத்ததாக செவ்வாயை சொல்லலாம். செவ்வாய் ரத்தத்தை வெளிப்படுத்தும் கிரகம். செவ்வாய் நீச்சமாகி, ராகு கேதுவுடன் சேர்ந்து சனியின் பார்வை பெற்றாலே உடல் எங்கும் மச்சமாக – அகோரமாக காட்சி அளிப்பார்கள் என்று ஜோதிட அலங்கார நூல் சொல்கிறது. ஒரு உயரிய பதவியில் வகிப்பவருக்கு அதுபோன்ற நிலை உள்ளது.பெண், ஆண் உறுப்புகளில் மச்சங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி இருந்தால், விரும்பி விபச்சாரத்தில் ஈடுபடுவது, விபச்சார விடுதிகளுக்குச் செல்வது போன்ற குணங்கள் இருக்கும்.வாழ வந்த பெண்ணிற்கு வலது பக்கம் மச்சம், ஏறு பிடிக்கிற மச்சானுக்கு இடது பக்கம் மச்சம் என்று ஒரு பழமொழி இருக்கிறது.பொதுவாக ஆண்களுக்கு இடது பக்கம் மச்சம் இருப்பது அதிர்ஷ்டத்தின் வெளிப்பாடு என்று நூல்கள் சொல்கின்றன. பெண்களுக்கு வலது பக்கம் மச்சம் இருப்பதும் நல்லது.அதேபோல நெஞ்சுப் பகுதியில் மச்சம் இருந்தால் கொஞ்சம் சுகவாசியாக இருப்பார்கள் என்று சொல்லலாம். பொதுவாக பின்புறம் இருக்கும் மச்சத்தால் திடீர் பணப்புழக்கம், அதிர்ஷ்மாகவும் இருப்பார்கள் என்று சொல்வார்கள்.

பொதுவாக கால்களில் மச்சம் இருப்பவர்களுக்கு காலில் சக்கரம் என்று சொல்வார்கள். ஒரு சிலர் உட்கார்ந்து கொண்டே காலை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள். அது உள்ளங்காலில் இருக்கும் மச்சத்தின் காரணமாகத்தான் இருக்கும். ஏனெனில் உள்ளங்காலில் இருக்கும் மச்சம் ஒரு அசைவைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஓடிக் கொண்டே இருப்பார்கள். மான் போன்று மச்சம், மீன் போன்று மச்சம் என்பதெல்லாம் உண்மையா?உண்மைதான். எந்த நட்சத்திரக் கூறில் ராகு, கேது, செவ்வாய் எல்லாம் அமைந்திருக்கிறதோ அதன் அடிப்படையில் மச்சத்தின் வடிவம் வேறுபடும். மச்சம் என்றால் மீன் என்றும் ஒரு அர்த்தம் உண்டு.மீனைப் போன்று இருக்கும் மச்சம் எல்லாம் விசேஷம். உள்ளங்க¨யில் எல்லாம் மச்ச ரேகை கூட உருவாகும். மச்ச ரேகை உண்டானால் மன்னனாகக் கூட ஆவார்கள்.மீனைப் போன்ற மச்சம் அதிர்ஷ்டத்தின் வெளிப்பாடு. இப்போதெல்லாம் அது அரிதாகிவிட்டது.நெல்லிக்காய் போல, மாவடு போல எல்லாம் மச்சம் உண்டு. உலகத்தில் எங்கோ ஒருவர் இதுபோன்ற மச்சங்கள் கொண்டிருப்பர்

Popular Post

Tips