சண்டிகேஸ்வரர் 108 போற்றி

chivaalayankalukku chelpavarkal chandikaesvararai valipaddaal maddumae, koayilukkuch chenra punneyam kidaikkum enpathu aitheekam. intha poarriyaich chonnaal manauruthi kidaikkum. paal valam perukum. ivarai 108 archchanai malarkal thoovi valipaduvomaaka! 1. oam arulvadivae poarri 2. oam apayavarathanae poarri 3. oam anthananae poarri 4. oam anukoolanae poarri 5. oam akanthaiyalippavanae poarri 6. oam akaththul aalnthavanae poarri 7. oam anparkku eliyavanae poarri … Continue reading "chandikaesvarar 108 poarri"
chandikaesvarar 108 poarri

சிவாலயங்களுக்கு செல்பவர்கள் சண்டிகேஸ்வரரை வழிபட்டால் மட்டுமே, கோயிலுக்குச் சென்ற புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த போற்றியைச் சொன்னால் மனஉறுதி கிடைக்கும். பால் வளம் பெருகும். இவரை 108 அர்ச்சனை மலர்கள் தூவி வழிபடுவோமா!1. ஓம் அருள்வடிவே போற்றி

2. ஓம் அபயவரதனே போற்றி

3. ஓம் அந்தணனே போற்றி

4. ஓம் அனுகூலனே போற்றி

5. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி

6. ஓம் அகத்துள் ஆழ்ந்தவனே போற்றி

7. ஓம் அன்பர்க்கு எளியவனே போற்றி

8. ஓம் அரவப்புரியோனே போற்றி

9. ஓம் ஆதிசிவன் வடிவே போற்றி

10. ஓம் ஆதிசண்டேஸ்வரனே போற்றி

11. ஓம் இடையனே போற்றி

12. ஓம் இனியவனே போற்றி

13. ஓம்இடையூறு களைபவனே போற்றி

14. ஓம் இறையருள் கூட்டுவிப்பவனே போற்றி

15. ஓம் ஈராறு கண்ணனே போற்றி

16. ஓம் ஈசானத்து அமர்ந்தவனே போற்றி

17. ஓம் உத்தமனே போற்றி

18. ஓம் உறுதி நெஞ்சனே போற்றி

19. ஓம் உறுதுணையே போற்றி

20. ஓம் எளியவனே போற்றி

21. ஓம் எச்சத்தன் சேயே போற்றி

22. ஓம் ஏற்றம் தரும் தெய்வமே போற்றி

23. ஓம் ஐயனே போற்றி

23. ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி

24. ஓம் கஜவாகனனே போற்றி

25. ஓம் கமண்டலதாரியே போற்றி

26. ஓம் கலியில் இருகரனே போற்றி

27. ஓம் கரியுரி அணிந்தவனே போற்றி

28. ஓம் களங்கமிலானே போற்றி

29. ஓம் காலமெல்லாம் அருள்பவனே போற்றி

30. ஓம் கிருபாநிதியே போற்றி

31. ஓம் கிருதயுகத்து பதினாறுகரனே போற்றி

32. ஓம் கும்பிடுங்கையனே போற்றி

33. ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி

34. ஓம் கொன்றைப் பிரியனே போற்றி

35. ஓம் கோ ரட்சகனே போற்றி

36. ஓம் சங்கு நிறனே போற்றி

37. ஓம் சடைமுடியனே போற்றி

38. ஓம் சச்சிதானந்தனே போற்றி

39. ஓம் சண்டீசன் ஆனவனே போற்றி

40. ஓம் சாந்தரூபனே போற்றி

41. ஓம் சாயுஜ்யம் அளிப்பவனே போற்றி

42. ஓம் சிவபக்தனே போற்றி

43. ஓம் சிவகண நாயகனே போற்றி

44. ஓம் சிவபாலனே போற்றி

45. ஓம் சிங்க வாகனனே போற்றி

46. ஓம் சிவபூஜைப் பிரியனே போற்றி

47. ஓம் சிவ பிரசாதம் ஏற்பவனே போற்றி

48. ஓம் சிவனருள் பெற்றவனே போற்றி

49. ஓம் சிவாலய தேவனே போற்றி

50. ஓம் சிரஞ்சீவியே போற்றி

51. ஓம் சிவனிடம் இட்டுச்செல்வோனே போற்றி

52. ஓம் சிகரமாய் விளங்குவோனே போற்றி

53. ஓம் சுருதிப்பிரியனே போற்றி

54. ஓம் சூலதாரியே போற்றி

55. ஓம் சூழ்வினையறுப்பவனே போற்றி

56. ஓம் சேய்ஞலூரனே போற்றி

57. ஓம் ஞானியே போற்றி

58. ஓம் ஞானியர் காவலனே போற்றி

59. ஓம் தவசியே போற்றி

60. ஓம் தனித்திருப்போனே போற்றி

61. ஓம் தயாபரனே போற்றி

62. ஓம் தனிச்சன்னதியுள்ளானே போற்றி

63. ஓம் துவாபரத்து நாற்கரனே போற்றி

64. ஓம் தியானேஸ்வரனே போற்றி

65. ஓம் திரேதாயுகத்து எண்கரனே போற்றி

66. ஓம் தெற்கு நோக்கனே போற்றி

67. ஓம் தேஜஸ் ரூபியே போற்றி

68. ஓம் நாற்கரனே போற்றி

69. ஓம் நற்றவ நாயகனே போற்றி

70. ஓம் நல்வழிப்படுத்துபவனே போற்றி

71. ஓம் நாயனார் ஆனவனே போற்றி

72. ஓம் நாடப்படுவனே போற்றி

73. ஓம் நூல் வடிவினனே போற்றி

74. ஓம் நித்தியனே போற்றி

75. ஓம் நிர்மலனே போற்றி

76. ஓம் நிறைவளிப்பவனே போற்றி

77. ஓம் நீறணிந்தவனே போற்றி

78. ஓம் பிரம்மச்சாரியே போற்றி

79. ஓம் பிரம்ம ஞானியே போற்றி

80. ஓம் பிரசண்டனே போற்றி

81. ஓம் பரசு ஏந்தியவனே போற்றி

82. ஓம் பவித்ரனே போற்றி

83. ஓம் பவித்ரை குமாரனே போற்றி

84. ஓம் பத்மாசனனே போற்றி

85. ஓம் பதமளிப்பவனே போற்றி

86. ஓம் புனிதனே போற்றி

87. ஓம் பூஜைபலன் அருள்வோனே போற்றி

88. ஓம் பெரியவனே போற்றி

89. ஓம் பேரருளாளனே போற்றி

90. ஓம் மண்ணிக்கரை மணியே போற்றி

91. ஓம் மறையோருள் மாணிக்கமே போற்றி

92. ஓம் முக்கண்ணனே போற்றி

93. ஓம் முன்னிலையறிந்தோனே போற்றி

94. ஓம் மோனனே போற்றி

95. ஓம் மோட்சமளிப்பவனே போற்றி

96. ஓம் ரிஷப வாகனனே போற்றி

97. ஓம் ரட்சிப்பனே போற்றி

98. ஓம் ருத்ராட்சனே போற்றி

99. ஓம் ருத்ராட்சம் அணிந்தவனே போற்றி

100. ஓம் வழித்துணையே போற்றி

101. ஓம் வரமருள் தேவனே போற்றி

102. ஓம் வித்தகனே போற்றி

103. ஓம் விசாரசர்மனே போற்றி

104. ஓம் வில்வப்பிரியனே போற்றி

105. ஓம் வீடளிப்பவனே போற்றி

106. ஓம் சர்வ உபகாரனே போற்றி

107. ஓம் சர்வ வல்லமை தருவோனே போற்றி

108. ஓம் சண்டிகேஸ்வரனே போற்றி! போற்றி!

Popular Post

Tips