சந்திரபகவான் 108 போற்றி

aiyoa! en kulanthaiyai chaappida vaippatharkul padaathapaadu paduththi vidukiraan, hoam orkkai elutha vaippatharkul poathum poathumenraaki vidukirathu. avarkalathu chaeshdaiyaik kuraikka enna vali enpavarkal, navakkiraka mandapaththilum, chivaalayankalil parivaara thaevathaiyaaka irukkum chanthirapakavaan munpum amarnthu intha poarriyaip paadalaam. thanneer valaththukkum uriyathu intha poarri. 1.oam ampuliyae poarri 2.oam amutha kalaiyanae poarri 3.oam alli aenthiyavanae poarri 4.oam ananthapuraththarulpavanae poarri 5.oam apaya karaththanae … Continue reading "chanthirapakavaan 108 poarri"
chanthirapakavaan 108 poarri

ஐயோ! என் குழந்தையை சாப்பிட வைப்பதற்குள் படாதபாடு படுத்தி விடுகிறான், ஹோம் ஒர்க்கை எழுத வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது. அவர்களது சேஷ்டையைக் குறைக்க என்ன வழி என்பவர்கள், நவக்கிரக மண்டபத்திலும், சிவாலயங்களில் பரிவார தேவதையாக இருக்கும் சந்திரபகவான் முன்பும் அமர்ந்து இந்த போற்றியைப் பாடலாம். தண்ணீர் வளத்துக்கும் உரியது இந்த போற்றி.1.ஓம் அம்புலியே போற்றி

2.ஓம் அமுத கலையனே போற்றி

3.ஓம் அல்லி ஏந்தியவனே போற்றி

4.ஓம் அனந்தபுரத்தருள்பவனே போற்றி

5.ஓம் அபய கரத்தனே போற்றி

6.ஓம் அமைதி உருவனே போற்றி

7.ஓம் அன்பனே போற்றி

8.ஓம் அஸ்த நாதனே போற்றி

9.ஓம் அமுதுடன் பிறந்தவனே போற்றி

10.ஓம் அயர்வு ஒழிப்பவனே போற்றி'

11.ஓம் ஆரமுதே போற்றி

12.ஓம் ஆத்திரேய குலனே போற்றி

13.ஓம் இனிப்புப் பிரியனே போற்றி

14.ஓம் இரண்டாம் கிரகனே போற்றி

15.ஓம் இனியவனே போற்றி

16.ஓம் இணையிலானே போற்றி

17.ஓம் இருள் அகற்றுபவனே போற்றி

18.ஓம் இந்தளூரில் அருள்பவனே போற்றி

19.ஓம் இரு கரனே போற்றி

20.ஓம் இரவு நாயகனே போற்றி

21.ஓம் ஈதலில் மகிழ்பவனே போற்றி

22.ஓம் ஈரெண் கலையனே போற்றி

23.ஓம் ஈர்ப்பவனே போற்றி

24.ஓம் ஈசன் அணியே போற்றி

25.ஓம் உவமையின் அரசனே போற்றி

26.ஓம் உலகாள்பவனே போற்றி

27.ஓம் எழில்முகனே போற்றி

28.ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி

29.ஓம் ஓணத்து அதிபதியே போற்றி

30.ஓம் ஒளடதீசனே போற்றி

31.ஓம் கடகராசி அதிபதியே போற்றி

32.ஓம் கதாயுதனே போற்றி

33.ஓம் கலைச்செல்வமே போற்றி

34.ஓம் காதல் தேவனே போற்றி

35.ஓம் குரு வடிவனே போற்றி

36.ஓம் குமுதப் பிரியனே போற்றி

37.ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி

38.ஓம் "க்லீம்' பீஜ மந்திரனே போற்றி

39.ஓம் கலைகளின் நாயகனே போற்றி

40.ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி

41.ஓம் சந்திரனே போற்றி

42.ஓம் சஞ்சீவியே போற்றி

43.ஓம் சதுரப்பீடனே போற்றி

44.ஓம் சதுரக்கோலனே போற்றி

45.ஓம் சமீப கிரகனே போற்றி

46.ஓம் சமுத்திர நாயகனே போற்றி

47.ஓம் சாம வேதப் பிரியனே போற்றி

48.ஓம் சாந்தி தருபவனே போற்றி

49.ஓம் சிவபக்தனே போற்றி

50.ஓம் சிங்கார அழகனே போற்றி

51.ஓம் சிங்கக் கொடி@யானே போற்றி

52.ஓம் சித்ராங்கதனுக்கு அருளியவனே போற்றி

53.ஓம் தண்ணிலவே போற்றி

54.ஓம் தலைச்சங்காட்டில் அருள்பவனே போற்றி

55.ஓம் தமிழ்ப்பிரியனே போற்றி

56.ஓம் தண்டாயுதனே போற்றி

57.ஓம் தட்சன் மருகனே போற்றி

58.ஓம் தன்மை குணத்தானே போற்றி

59.ஓம் தாரைப்பிரியனே போற்றி

60.ஓம் திருமகள் சோதரனே போற்றி

61.ஓம் திங்களூர்த் தேவனே போற்றி

62.ஓம் திருப்பாச்சூரில் அருள்பவனே போற்றி

63.ஓம் திங்களே போற்றி

64.ஓம் திருஉருவனே போற்றி

65.ஓம் திருப்பதியில் பூஜித்தவனே போற்றி

66.ஓம் திருமாணிக்கூடத்து அருள்பவனே போற்றி

67.ஓம் தென்கீழ் திசையனே போற்றி

68.ஓம் தேன்நிலவாய் ஒளிர்பவனே போற்றி

69.ஓம் தூவெண்மையனே போற்றி

70.ஓம் தொண்டருக்கு அருள்பவனே போற்றி

71.ஓம் நலம் தருபவனே போற்றி

72.ஓம் நட்சத்திர நாயகனே போற்றி

73.ஓம் நெல் தானியனே போற்றி

74.ஓம் நீர் அதிதேவதையனே போற்றி

75.ஓம் பயறு விரும்பியே போற்றி

76.ஓம் பழையாறையில் அருள்பவனே போற்றி

77.ஓம் பத்துபரித்தேரனே போற்றி

78.ஓம் பரிவார தேவதையே போற்றி

79.ஓம் பல்பெயரனே போற்றி

80.ஓம் பத்தாண்டாள்பவனே போற்றி

81.ஓம் பாண்டவர் தலைவனே போற்றி

82.ஓம் பார்வதி ப்ரத்யதிதேவதையனே போற்றி

83.ஓம் புதன் தந்தையே போற்றி

84.ஓம் போற்றாரிலானே போற்றி

85.ஓம் பெண் கிரகமே போற்றி

86.ஓம் பெருமையனே போற்றி

87.ஓம் மதியே போற்றி

88.ஓம் மனமே போற்றி

89.ஓம் மன்மதன் குடையே போற்றி

90.ஓம் மகிழ்விப்பவனே போற்றி 

91.ஓம் மாத்ரு காரகனே போற்றி

92.ஓம் மால் இதயத் தோன்றலே போற்றி

93.ஓம் முத்துப்பிரியனே போற்றி

94.ஓம் முத்து விமானனே போற்றி

95.ஓம் முச்சக்கரத் தேரனே போற்றி

96.ஓம் மூலிகை நாதனே போற்றி

97.ஓம் மூன்றாம் பிறையனே போற்றி

98.ஓம் மேற்கு நோக்கனே போற்றி

99.ஓம் ரோகிணித் தலைவனே போற்றி

100.ஓம் ரோகம் அழிப்பவனே போற்றி

101.ஓம் வைசியனே போற்றி

102.ஓம் வில் ஏந்தியவனே போற்றி

103.ஓம் விண்ணோர் திலகமே போற்றி

104.ஓம் விடங்கன் இடக்கண்ணே போற்றி

105.ஓம் விடவேகம் தணித்தவனே போற்றி

106.ஓம் வெண்குடையனே போற்றி

107.ஓம் வெள் அரளிப் பிரியனே போற்றி

108.ஓம் வெண் திங்களே போற்றி போற்றி

Popular Post

Tips