லட்சுமி 108 போற்றி

vellikkilamaikalilum, valarpirai thirithiyai thithi naadkalilum ladchumi thaayaarukku chenthaamarai malar choodi inthap poarriyaich cholli valipaddaal chelvavalam chirakkum. thirumaa makalae chelvi poarri thirumaal ulaththil thikalvaay poarri thiruppaar kadalvaru thaevae poarri irunela makkal iraivee poarri arulae uruvaay amainthaay poarri marunerai malaril vaalvaay poarri kuruvena janam koduppaay poarri iruloliththu inpam eevoy poarri arulpoalinthu emmai aalvaay poarri therultharu arivin thiranae … Continue reading "ladchumi 108 poarri"
ladchumi 108 poarri

வெள்ளிக்கிழமைகளிலும், வளர்பிறை திரிதியை திதி நாட்களிலும் லட்சுமி தாயாருக்கு செந்தாமரை மலர் சூடி இந்தப் போற்றியைச் சொல்லி வழிபட்டால் செல்வவளம் சிறக்கும்.

திருமா மகளே செல்வி போற்றி
திருமால் உளத்தில் திகழ்வாய் போற்றி
திருப்பாற் கடல்வரு தேவே போற்றி
இருநில மக்கள் இறைவீ போற்றி
அருளே உருவாய் அமைந்தாய் போற்றி
மருநிறை மலரில் வாழ்வாய் போற்றி
குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி
இருளொழித்து இன்பம் ஈவோய் போற்றி
அருள்பொழிந்து எம்மை ஆள்வாய் போற்றி
தெருள்தரு அறிவின் திறனே போற்றி 
ஆறுதல் எமக்கிங்கு அளிப்பாய் போற்றி
சீறுதல் கொள்ளாத் திருவே போற்றி
ஊக்கம் தளிக்கும் உருவே போற்றி
ஆக்கமும் ஈயும் அன்னாய் போற்றி
இறைவி வலப்பால் இருப்போய் போற்றி
பொறையுடன் உயிரைப் புணர்ப்போய் போற்றி
அன்பினைக் காட்டும் ஆயே போற்றி
வன்பினை என்றும் வழங்காய் போற்றி
பனிமதி உடனே வருவாய் போற்றி
கனியிலும் இனிய கமலை போற்றி 
நிமலனை என்றும் நீங்காய் போற்றி
கமலம் துதித்த கன்னி போற்றி
குற்றம் ஓராக் குன்றே போற்றி
செற்றம் கொள்ளாச் சிறப்போய் போற்றி
அன்னை யென்ன அணைப்பாய் போற்றி
தன்னிகர் தாளைத் தருவாய் போற்றி
மாயனாம் மலர்க்கு மணமே போற்றி
நேயமுற் றவனை நீங்காய் போற்றி
இறைவியாய் எங்கணும் இருப்பாய் போற்றி
மறைமொழி வழங்கும் மாண்பே போற்றி
மாலினைக் கதியாய் மதித்தாய் போற்றி
சீலஞ் செறிந்த சீதா போற்றி
அன்பர்க்கு அருள்புரி அருட்கடல் போற்றி
இன்பம் அருளும் எந்தாய் போற்றி
அச்சுதன் காதல் ஆர்வோய் போற்றி
எச்சுவை தனையும் ஈவோய் போற்றி
பூதலத் தன்று போந்தாய் போற்றி
தீதெலாம் தீர்க்கம் திருவே போற்றி
இலங்கை யிற்சிறை இருந்தோய் போற்றி
நிலங்கொள் நீர்மை நிறைவே போற்றி 
திரிசடை நட்பைத் தேர்ந்தோய் போற்றி
பரிவுடையவர் பால் பிரிவினாய் போற்றி
குரங்கினைக் கண்டு குளிர்ந்தோய் போற்றி
வரங்கள் அவர்க்கு வழங்கினை போற்றி
அரக்கியர்க்கு அபயம் அளித்தாய் போற்றி
இரக்கமாய் ஒன்றிற்கு இருப்பிடம் போற்றி
ராவணற்கு இதமே இசைத்தோய் போற்றி
ராமருக்குரிய இன்பே போற்றி
கணவனை அடைந்து களித்தோய் போற்றி
குணநிதி யாகக் குலவினாய் போற்றி 
அரசியாய் அயோத்திக்கு ஆனாய் போற்றி
முரசொலி அந்நகர் முதல்வி போற்றி
உருக்கு மணியாய் உதித்தோய் போற்றி
செருக்கொழித்து ஒளிரும் செய்யாய் போற்றி
சிசுபா லன்தனைச் செற்றோய் போற்றி
பசுநிரை மேய்போன் பாரியே போற்றி
பத்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
எத்திக்கும் உன்துதி என் தாய் போற்றி
மாலின் சினத்தை மறைப்போய் போற்றி
மேலருள் புரிய விளம்புவாய் போற்றி 
மாதவனோடு வாழ்வாய் போற்றி
ஆதவன் ஒளிபோன்று அமைந்தாய் போற்றி
சேதனர் பொருட்டுச் சேர்வாய் போற்றி
பாதகம் தீர்க்கப் பகர்வோய் போற்றி
நாதனுக்கு அருஞ்சொல் நவில்வோய் போற்றி
ஏதமில் பொன்னென இலங்குவோய் போற்றி 
தக்கெனவ ஓதும் தாயே போற்றி
மக்களின் இன்னலை மாய்ப்போய் போற்றி
பக்தர்க்கு அருளும் பாலகியே போற்றி
துக்கம் ஒழிய அருள்வாய் போற்றி 
அஞ்சலென்று அருளும் அன்பே போற்றி
தஞ்சமென் றவரைச் சார்வாய் போற்றி
பங்கயத் துறையும் பாவாய் போற்றி
செங்கண்ணன் மார்பில் திகழ்வாய் போற்றி
தண்ணருள் கொண்டுயிர் காப்பாய் போற்றி
எண்ணறு நலந்தரும் எம்மன்னை போற்றி
நான்கிரு நாமம் நயந்தாய் போற்றி
வான்மிகு பெருமை வாய்ந்தோய் போற்றி
வெற்றியைத் தருமோர் விமலை போற்றி
அற்றவர் அடையும் அரும்பொருள் போற்றி 
வரமளித்து ஊக்கும் வாழ்வே போற்றி
உரமதை ஊட்டும் உறவே போற்றி
செல்வமிக் காக்கும் தேவி போற்றி
அல்லலை ஒழிக்கும் அருளே போற்றி
வீரம் விளைக்கும் வித்தே போற்றி
காரணம் பூதன் கருத்தே போற்றி
பண்பினை வளர்க்கும் பயனே போற்றி
நண்பாய் அறிஞர்பால் நண்ணுவாய் போற்றி
எண்ணினுள் எண்ணே இசையே போற்றி
கண்ணினுள் மணியே கருத்தே போற்றி 
அறிவினுள் அறிவாம் அன்னே போற்றி
நெறியினுள் நெறியாம் நிலையே போற்றி
உணர்வினுள் உணர்வாம் உருவே போற்றி
குணத்தினுள் குணமாம் குன்றே போற்றி
கருத்தினுள் கருத்தாய்க் கலந்தாய் போற்றி
அருத்தியை ஆக்கும் அறிவே போற்றி
தமிழினுக்கு இனிமை தருவாய் போற்றி
அமிழ்தினும் இனிய ஆயே போற்றி
பதின்மர் பாடலில் புதிவோய் போற்றி
துதியாய் நூலினுள் துதைந்தோய் போற்றி 
தொண்டரின் தொண்டுள்ளம் சேர்ப்போய் போற்றி
அண்டர் போற்றும் அமலை போற்றி
நாரணர்க் கினிய நல்லோய் போற்றி
மாரனைப் பெற்ற மாதே போற்றி
உலகிடைப் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
நலமெலாம் உயிர்க்கு நல்குக போற்றி
எங்களுக் கின்னருள் ஈந்தருள் போற்றி
மங்கலத் திருநின் மலரடி போற்றி.

Popular Post

Tips