காதோடு காதாக ஆண்களை பற்றிய சில இரகசியங்கள் …

eppoathum penkalukku ellaamae theriyum enru nenaikkak koodaathu. maelum avarkalukku aankalaip parri neraiya vishayankal theriyaathu. chollappoanaal aankal neraiya vishayaththil penkalai vida mikavum thiramaiyaanavarkal. avai ennennavenru chirithu paarppoamaa!!! 1. aankalukku chamaippathu enraal mikavum pidikkum. chamaippathil penkal thaan mikavum chiranthavarkal enru yaar chonnaarkal? chamaiyalarai penkalukkuth thaan enru cholvathu unmai thaan. aanaal appadi chamaikkum penkalai vida, thaneyaaka veedu eduththu … Continue reading "kaathodu kaathaaka aankalai parriya chila irakachiyankal …"
kaathodu kaathaaka aankalai parriya chila irakachiyankal …

எப்போதும் பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கக் கூடாது. மேலும் அவர்களுக்கு ஆண்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது. சொல்லப்போனால் ஆண்கள் நிறைய விஷயத்தில் பெண்களை விட மிகவும் திறமையானவர்கள். அவை என்னென்னவென்று சிறிது பார்ப்போமா!!!

1. ஆண்களுக்கு சமைப்பது என்றால் மிகவும் பிடிக்கும். சமைப்பதில் பெண்கள் தான் மிகவும் சிறந்தவர்கள் என்று யார் சொன்னார்கள்? சமையலறை பெண்களுக்குத் தான் என்று சொல்வது உண்மை தான். ஆனால் அப்படி சமைக்கும் பெண்களை விட, தனியாக வீடு எடுத்து தங்கி, சமைத்து உண்ணும் ஆண்களின் சமையல் உண்மையில் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அத்தகைய சமையல், அவர்களது மனநிலையைப் பொறுத்ததே ஆகும்.

2. பெண்களை விட ஆண்களே மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்கள். ஆண்கள் அனைவரும் 'பெண்கள் உணர்ச்சிவசப்பட்டால் அழுவார்கள்' என்று சொல்கின்றனர். உண்மையில் ஆண்களே உணர்ச்சிவயப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் அதனை வெளிப்படுத்தமாட்டார்கள். பெண்கள் ஏதேனும் ஒரு கஷ்டம் என்றால் அழுது வெளிப்படுத்துவர். ஆனால் ஆண்கள் அதனை பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். ஏனெனில் ஆண்களிடம் இருக்கம் ஈகோ அதனை கட்டுப்படுத்தும்.

3. அடிக்கடி ஆண்கள் பெண்களை அதிகம் துன்புறுத்துவார்கள். ஆனால் அதில் ஒரு காரணம் இருக்கும். அதிலும் அவர்கள் உடுத்தும் உடை, கூந்தல் அழகு, ஹை ஹீல்ஸ் அல்லது பேசும் விதம் போன்றவற்றை வைத்து துன்புறுத்துவதில் மிகவும் பிஸியாக இருப்பர். ஏனெனில் ஆண்கள் அவ்வாறு செய்தால் அது அவர்களது ஒரு வகையான அன்பை வெளிப்படுத்தும் விதம் ஆகும். ஆனால் அவ்வாறு செய்வது ஒரு அன்பின் காரணமாக என்று நிறைய பெண்களுக்கு தெரியாது.

4. நிறைய பேர் நினைக்கின்றனர், ஆண்கள் அனைவருக்கும் காம உணர்வு அதிகம், அவர்கள் எப்போதும் அந்த சிந்தனையிலேயே இருப்பர். ஆனால் உண்மையில் அவர்கள் எப்போதும் அவ்வாறு இருப்பதில்லை, அவர்களது ஹார்மோன் தான் அவர்களை அவ்வாறு தூண்டுகிறது. இது நிறைய ஆராய்ச்சியில் கூட நிரூபிக்கப்பட்டுள்ளது.

5. ஆண்களுக்கு வாயாடுவது என்பது பிடிக்காது என்று நிறைய பெண்கள் நினைக்கின்றனர். ஆனால் ஆண்களுக்கும் பிடிக்கும். அவ்வளவாக வாயாடவில்லை என்றால் கூட ஓரளவாவது வாயாடுவர். அதிலும் அவர்கள் பெரும்பாலும் வாயாடுவது எதைப் பற்றி என்று கூறினால், பெண்களைப் பற்றி தான் இருக்கும்

Popular Post

Tips