உங்களுக்கு காதல் இருப்பதற்கான அறிகுறிகள்!!!

ithuvarai eththanaiyoa manetharkalai chanthiththu, avarkalul oruvan/oruththi meethu Kadhal ennum arputhamaana onru malarnthirukkum. aanaal thurathirshdavachamaaka antha Kadhalaanathu, chariyillaatha purithal, nampikkaiyinmai marrum pala chandaikal poanravarraal tholviyadainthirukkum. iruppinum palar athanai manathil thaankik kondu, inemael avarkalai chanthikkakkoodaathu, avarkalaip parriya ennaththai aliththuviddu, vaalkkaiyai innum chirappaaka nadaththuvatharku aarampippaarkal. avvaaru chilar maddumae, ethaiyum nenaikkaamal iruppaarkal. aanaal palaraal avvaaru irukka mudiyaathu. evvalavu thaan … Continue reading "unkalukku Kadhal iruppatharkaana arikurikal!!!"
unkalukku Kadhal iruppatharkaana arikurikal!!!

இதுவரை எத்தனையோ மனிதர்களை சந்தித்து, அவர்களுள் ஒருவன்/ஒருத்தி மீது காதல் என்னும் அற்புதமான ஒன்று மலர்ந்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த காதலானது, சரியில்லாத புரிதல், நம்பிக்கையின்மை மற்றும் பல சண்டைகள் போன்றவற்றால் தோல்வியடைந்திருக்கும்.

இருப்பினும் பலர் அதனை மனதில் தாங்கிக் கொண்டு, இனிமேல் அவர்களை சந்திக்கக்கூடாது, அவர்களைப் பற்றிய எண்ணத்தை அழித்துவிட்டு, வாழ்க்கையை இன்னும் சிறப்பாக நடத்துவதற்கு ஆரம்பிப்பார்கள். அவ்வாறு சிலர் மட்டுமே, எதையும் நினைக்காமல் இருப்பார்கள். ஆனால் பலரால் அவ்வாறு இருக்க முடியாது.

எவ்வளவு தான் சண்டை போட்டுக் கொண்டு, காதல் என்பதே இனி நம்முள் இல்லை என்று பிரிந்துவிட்டாலும், காதலுணர்வு என்றும் மறையாது. குறிப்பாக பிரிந்த பின்னும், இருவரும் பேசிக்கொண்டால், நிச்சயம் காதலுணர்வு மறைவதற்கான வாய்ப்பு இருக்காது. இப்போது காதல் தோல்விக்கும் பின்னும் அவன்/அவளிடம் காதல் இருக்கிறது என்பதை அறிய சில அறிகுறிகள் உள்ளன. அது என்னவென்று பார்க்கலாமா!!!

பழைய வாழ்க்கையைப் பற்றி பேசுவது
பிரிவுக்கு பின் இருவரும் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கையில், அவர்கள் திடீரென்று பழைய வாழ்க்கையில் நடந்த சந்தோஷமான தருணங்களைப் பேசி, ஞாபகப்படுத்துவார்கள். 

அனைத்து போட்டோக்களையும் விரும்புவது
தற்போது ஃபேஸ் புக் இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. அவ்வாறு பிரிவுக்கு பின்னர் காதலானது மனதில் இருந்தால், அவர்கள் உங்கள் போட்டோக்கள் அனைத்திற்கும் 'லைக்' கொடுப்பார்கள். அதுவும் உடனே உடனே கொடுப்பார்கள்.

மெசேஜ் அனுப்புவது
மனதை கவரும் வகையிலும், சோகத்தை தெரிவிக்கும் வகையிலும் மெசேஜ் அனுப்புவார்கள்.

எங்கும் தொடர்வார்கள்
காதல் பிரிவுக்கு பின், எங்கு சென்றாலும் தொடர்ந்து வருவார்கள். அப்போது அவர்களை பார்த்துவிட்டு, அவர்களிடம் "என்ன செய்கிறாய்" என்று கேட்டால், திருப்பி "உன்னை பார்ப்பேன் என்று நினைக்கவில்லை" என்று எதுவும் தெரியாதவாறு நடந்து கொள்வார்கள்.

ஆதரவாக பேசுவார்கள்
ஒருவேளை மனக்கஷ்டத்தில் அழுது கொண்டு இருந்தால், அப்போது அவர்கள் வந்து, "அழ வேண்டாம், நான் இருக்கிறேன்" என்று ஆதரவாக இருப்பார்கள்.

நண்பர்களிடம் விசாரிப்பது
முன்னாள் காதலன்/காதலியுடன் தொடர்பு இல்லாவிட்டால், அவர்கள் இருவருக்கும் பொதுவாக இருக்கும் நண்பர்களிடம் பேசி, உங்கள் கண் முன் எதிர்பார்க்காத நேரத்தில் வந்து நிற்பார்கள்.

ஆன்லைனில் உள்ளனரா என்று பார்ப்பது 
சமூக தொடர்பு சாதனங்கள் பல இருக்கும் இந்த உலகில் எங்கு சென்றாலும், பிரிவிற்கு பின் இருக்கும் சூழ்நிலையை நன்கு மற்றவர்கள் தெரிந்து கொள்ளலாம். அதிலும் பிரிவிற்கு பின் தமது நிலையை அறிவதற்கு, தோல்விக்கு பின்னரும் நமது ப்ரொஃபைலை வந்து அடிக்கடி பார்ப்பார்கள். இதை ஒருசில செட்டிங்ஸ் மூலம் யார் யார் நமது ப்ரொஃபைலுக்கு வந்துள்ளனர் என்று தெரிந்து கொள்ளலாம்.

போன் செய்வது 
காதல் தோல்விக்கு பின்னர் தேவையில்லாமல் போன் செய்வார்கள். அவ்வாறு போன் செய்து, தேவையில்லாத விஷயத்தை பற்றி பேசுவார்கள். இவ்வாறான செயல்கள் இருந்தால், இன்னும் அவர்கள் மனதில் காதல் இருப்பதற்கு அறிகுறியாகும்.

இவை நீங்கள் புதிதாக காதலி விழுந்துவிட்டாலும் பொருந்தும்

Popular Post

Tips