தலைமுடி உதிர்வதைத் தடுக்க…

  muppathu vayathaith thaandiyathum mun valukkai(front Bald ) vilum enru cholvaarkal.. kaaranam pala koorappaddaalum, vayathu muthirvum oru kaaranamaaka chollappadukirathu. aanaal intha vayathilthaan poaruppukal athikam vanthu chaerum.    athika manachsumaikal vanthu chaerum vayathu intha naduththara vayathu. aluvalakap pane(Office work,), kudumpach chikkalkal(Family Issues) ippadi anaiththum oddumoaththamaaka vanthu manathai kulappamadaiyach cheyyum vayathu..ithu.  ithanaal aerpadum choarvu(Debility), kavalai(Anxiety) poanra kaaranankalaalum … Continue reading "thalaimudi uthirvathaith thadukka…"
thalaimudi uthirvathaith thadukka…

 

முப்பது வயதைத் தாண்டியதும் முன் வழுக்கை(front Bald ) விழும் என்று சொல்வார்கள்.. காரணம் பல கூறப்பட்டாலும், வயது முதிர்வும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த வயதில்தான் பொறுப்புகள் அதிகம் வந்து சேரும். 
 
அதிக மனச்சுமைகள் வந்து சேரும் வயது இந்த நடுத்தர வயது. அலுவலகப் பணி(Office work,), குடும்பச் சிக்கல்கள்(Family Issues) இப்படி அனைத்தும் ஒட்டுமொத்தமாக வந்து மனதை குழப்பமடையச் செய்யும் வயது..இது.  இதனால் ஏற்படும் சோர்வு(Debility), கவலை(Anxiety) போன்ற காரணங்களாலும் முடி உதிரும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.. 
 
உடல்கோளாறுகள் காரணமாகக்கூட தலைமுடி உதிரும். சரி.. இத்தகைய முடி உதிர்வைத் தடுக்க முடியாதா? என்றால் நிச்சயம் முடியும் என்றுதான் சொல்ல வேண்டும்.
முதலில் உங்களுடைய பிரச்னைகளை அலசி ஆராய்ந்து, அதற்கான சுமூக முடிவெடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
 
தேவையில்லாத, மனதை பாதிக்கத்தக்க வகையில் இருக்கும் பிரச்னைகளை மனதிற்குள் செலுத்தாமல் அந்தப் பிரச்னைகளை வெளியே தூக்கி எறிய வேண்டும். 
 
இந்த இரண்டும் செய்தால் மன ரீதியாக உடலில் ஏற்படும் பிரச்னைகள் உட்பட முடி உதிர்வையும் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். 
 
முடி உதிர்வை தடுக்கும் இரண்டாவது(The second way to prevent loose hair) வழிதான், அதற்குரிய முறையான வைத்தியம்.. 
 
தலைமுடி உதிர்வைத் தடுக்கும் வழிமுறைகள்:(Methods to prevent hair shedding)
 
1. ஆயில் மசாஜ் (Oil Masage)
 
ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து இளஞ்சூடாக்கவும். விரல் தாங்கும் சூட்டில் எண்ணெயை தலையில் தடவி விரல்களால் மசாஜ் செய்து விடுங்கள்..
 
2. தலையில் எண்ணையைத் தேய்க்கும்போது மயிர்கால்களில் படும்படி தடவும். முடியானது மிகவும் மென்மையான தன்மையுடையதால் அதிகமாக போட்டு கசக்கித் தேய்க்ககூடாது. மிதமாகத் தேய்க்கவும். பிறகு டவல் ஒன்றை எடுத்து அதை வெந்நீரில் நனைத்துப் பிழிந்துகொள்ளுங்கள். ஈரமாக்கிய துண்டை தலையில் நன்றாக இறுக்கிக் கட்டிக்கொள்ளுங்கள். ஒரு அரைமணி நேரத்திற்குப் பிறகு தலைக்கு குளித்துப் பாருங்கள்.. உங்களுக்குப் புத்துணர்வு கிடைப்பதோடு தலைமுடிக்கும் புத்துணர்வு கிடைக்கும். 
 
3. இந்த முறையை நாள்விடாமல் தொடர்ந்து ஒரு வாரம் செய்துவர முடி உதிர்வைக் கட்டுப்படுத்தாலம். 
 
முடி உதிர்வைத் தடுக்க தேங்காய்ப்பால்:(Coconut milk is used to prevent loose hair)
 
தேங்காய்ப்பாலின் மகத்துவத்தை இதன் மூலம் நீங்கள் அறிந்துகொள்ளலாம். நன்றாக முற்றிய தேங்காயை துருவி அதிலிரிருந்து பால் எடுத்துக்கொள்ளுங்கள். அதை சிறிதளவு தண்ணீருடன் கலந்து இளஞ்சூடாக்கவும். சூடாக்கிய தேங்காய்பால் நீரை கைத்தாங்கும் வெப்பத்தில் இருக்கும்போது தலையில் தேய்க்கவும்..பதினைந்து நிமிடம் கழித்து குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர உங்கள் முடி உதிரும் பிரச்னை நாளடைவில் கட்டுக்குள் வரும். முடியும் உதிராது..
 
ஆலிவ் ஆயிலின் அற்புதம்:(The Perfect Olive Oil)
 
ஆலிவ் எண்ணையைத் தொடர்ந்து முறையாகப் பயன்படுத்தி வந்தால் உங்களுக்கு தலைமுடிப் பிரச்சனை விரைவில் தீரும்.
 
 
ஆலிவ் எண்ணையின் பயன்கள்: 
 
1. பொடுகை நீக்குகிறது. 2. நரைமுடி தோன்றாமல் காக்கிறது. 3. கூந்தலை வலுப்பெறச் செய்கிறது. 4. முடி உதிர்வை தடுக்கிறது.
 
இந்த ஆலிவ் எண்ணையுடன் பாதாம் எண்ணையும் கலந்து தேய்த்து வந்தால் பொடுகு தொல்லை ஒழியும். 
 
தேங்காய்ப்பால் மட்டுமா? பசும்பால் கூட...(Cow 's milk also prevents hair shedding)
 
பசும்பால் முடிஉதிர்வைக் கட்டுப்படுத்துகிறது. புதிதாக கறந்த பசும்பாலை காய்ச்சி தலையில் தேய்த்து மசாஜ் செய்து விடுங்கள். ஒரு பத்து நிமிடம் அதை ஊற விடவும். இப்போது உங்களுக்குப் பிடித்த நல்ல ஷாம்பூவை போட்டு குளித்துவிடுங்கள்.. உங்கள் தலைமுடி பளபளவென மின்னும்.. கூடவே முடி உதிர்தலும் தடுக்கப்பட்டுவிடும். தொடர்ந்து செய்துப் பாருங்கள்.. பலன் நிச்சயம்.
 
நோய்த்தீர்க்கும் பந்தயத்தில் வெல்லும் வெந்தயம்:(Turmeric prevents hair shedding)
 
வெந்தயம் தலைப்பில் உள்ளவாறே, முக்கிய வைத்தியங்களில் பயன்படுகிறது. தலைமுடி உதிரும் பிரச்னை உள்ளவர்களுக்கு இது மாபெரும் மருந்து. அந்தக் காலங்களில் வெந்தயத்தை சீயக்காயுடன் சேர்த்து அரைத்து தலைக்கு குளித்து வந்தார்கள். அப்போது பெண்களின் தலைமுறை "கருகரு"வென இருந்தது. இப்போது கருமைநிறம் கொண்ட கூந்தல் உடையவர்கள்கூட அதை சாயம்(hair dye) பூசி வெளுத்துவிடுகிறார்கள். இயற்கையான கூந்தலே பெண்களுக்கு என்றுமே அழகுதரும். 
 
வெந்தயத்தை 4 மணி நேரம் ஊறவைத்து, அரைத்து தலைத்துக் குளித்துவர முடிஉதிரும் பிரச்னை நாளடைவில் ஒழிந்துபோகும். கூந்தலுக்கு பளபளப்புத் தன்மைத்தரக்கூடிய இந்த வெந்தயம். 
 
முடிஉதிரும் பிரச்னை யார் யாருக்கெல்லாம் வரும்?
 
இதில் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லை.. இது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். சிலருக்கு பாரம்பரியமாக வரும்.. சிலருக்கு இது அவரவர்கள் பணிபுரியும் சூழலுக்கேற்ப அமையும்.. தூசி மிகுந்த, வெப்ப மிகுந்த சூழல்களில் பணிபுரிபவர்களுக்கு இத்தகைய பிரச்னைகள் அதிகம் இருக்கும். இவ்வாறானவர்கள் தங்களின உடலின் வெப்ப நிலையை சீராக வைத்துக்கொள்வது அவசியமாகும். 
 
வேறு சில நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும், மருந்து மாத்திரைகளால் கூட, பக்கவிளைவாக முடிஉதிரும் பிரச்சனை இருக்கும். இவைற்றையெல்லாம் கவனமுடன் கையாளும்போது மிக விரைவாக முடிஉதிரும் பிரச்னையை சரி செய்யலாம்.. 

Popular Post

Tips