குரு பெயர்ச்சி பரிகாரங்கள்

maesham: vinaayakar, murukan, thurkaiyai  valipadunkal. viyaalanthorum kuruvukku ney vilakkaerri valipadavum. varukadalai, vellam thaanam kodunkal. chivappunera aadai athirshdam tharum.    rishapam: kanapathi hoamam, mahaachandi hoamam, lashmi kupaerapoojai cheyyalaam. aelaip penkalukku maruththuva uthavi marrum thirumaankalyam cheythu tharalaam. chanthana nera aadai anevathu nallathu.    mithunam: vishnu chahasranaamam paaraayanam cheyyunkal. majchalnera ineppup pandalankalai viyaalakkilamaikalil kaakkaikku idunkal. idathu kaiyil velli … Continue reading "kuru peyarchchi parikaarankal"
kuru peyarchchi parikaarankal
மேஷம்: விநாயகர், முருகன், துர்கையை  வழிபடுங்கள். வியாழன்தோறும் குருவுக்கு நெய் விளக்கேற்றி வழிபடவும். வறுகடலை, வெல்லம் தானம் கொடுங்கள். சிவப்புநிற ஆடை அதிர்ஷ்டம் தரும். 
 
ரிஷபம்: கணபதி ஹோமம், மஹாசண்டி ஹோமம், லஷ்மி குபேரபூஜை செய்யலாம். ஏழைப் பெண்களுக்கு மருத்துவ உதவி மற்றும் திருமாங்கல்யம் செய்து தரலாம். சந்தன நிற ஆடை அணிவது நல்லது. 
 
மிதுனம்: விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். மஞ்சள்நிற இனிப்புப் பண்டலங்களை வியாழக்கிழமைகளில் காக்கைக்கு இடுங்கள். இடது கையில் வெள்ளி வளையம் அணிந்தால் நல்லது. அசிரி மாவினால் சிறுசிறு உருண்டைகள் செய்து, ஆறு குளத்து மீன்களுக்குப் போடுவது புண்ணியம் தரும். 
 
கடகம்: பார்வதி, பரமேஸ்வரர், ஸ்ரீலஷ்மி, ஸ்ரீதுர்கை ஆகியோரை வழிபட  வேண்டும். ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவுங்கள். வெல்லம், கோதுமை, சிவப்பு மலர்கள், தாமிரப் பாத்திரம் இவற்றைக் கோவிலுக்குக் கொடுப்பது சிறந்தது. 
 
சிம்மம்: சூரியனை வழிபடுங்கள். சூரிய வழிபாடு நன்மை தரும். அதிதேவதையாக ருத்ரனையும் வழிபடலாம். கணபதி, ஸ்ரீதுர்கை மற்றும் ராகுவையும் வழிபடலாம். ஞாயிறுதோறும் எருக்கஞ்செடிக்கு நண்பகல் நேரத்தில் நீருற்றலாம். 
 
கன்னி: ஸ்ரீலஷ்மி நாராயணரை வழிபடுங்கள். ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம், பாராயணம் செய்யுங்கள். சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது சிறப்பான பலன்களை தரும். நெற்றியில் மஞ்சள் சந்தனம் அணிய, சுபகாரியத் தடை விலகும். 
 
துலாம்: மகாகணபதி, ஸ்ரீதுர்கை, ராகு-கேது ஆகியோரை வழிபடவும். கடுகு,  புகையிலை தானம் கொடுக்கலாம். பார்வையற்றவர்களுக்கு இயன்ற உதவிகள் செய்யுங்கள். பொன் ஆபரணம் ஒன்றை அணிவது சிறப்பு. 
 
விருச்சிகம்: ஸ்ரீதுர்கை, கணபதி, ஸ்ரீவிஷ்ணு, பைரவ ஆராதனைகள்  செய்ய வேண்டும். பெரியவர்களையும் பெற்றோர்களையும் கவுரவிக்கவும். ஏழை சிறுவர்களின் கல்விச் செலவை ஏற்கலாம். சிவப்பு ஆடை அணிவது செல்வம் சேர்க்கும். 
 
தனுசு: தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். ராகுவுக்கு திருநாகேஸ்வரம் சென்று பால் அபிஷேகம் செய்தால் சிறப்பு உண்டாகும். மஞ்சள்  ஆடை உடுத்துங்கள். திங்கட்கிழமைகளில் சிவ ஆராதனை செய்யுங்கள். 
 
மகரம்: ஸ்ரீவிநாயகரை வழிபடுங்கள். சனிக்கிழமைகளில் பைரவரை  கும்பிட வேண்டும். ஆராதியுங்கள். வீட்டில் வாழைமரம் வளர்த்து, அதனடியில் நெய் விளக்கேற்றுங்கள். எள், உளுந்தை ஓடும் நதி நீரில் போடுவது சிறந்த பரிகாரம் ஆகும். 
 
கும்பம்: சனிபகவானை வழிபடுங்கள். சனிக்கிழமைகளில் காக்கைக்கு எள் சாதம் இடுங்கள். பார்வையற்றவர்களுக்கும்  இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். சிவபெருமானையும் பத்ரகாளிளையும் வழிபடுங்கள். 
 
மீனம்: ஸ்ரீதுர்கை, விஷ்ணுவை வணங்க வேண்டும். பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு தோஷத்தை அறவே போக்கும். மஞ்சள் ஆடை உடுத்துவது நல்லது.    

Popular Post

Tips