எடுப்பான மார்பக்கமும் பிரா அணிவதன் பிரச்சனைகளும்

perumpaalaana penkal smaarddaakavum, ahhpaenchiyaakavum irukkum piraavai athikam thaerntheduththu anevaarkal. ivvaaru tharpoathu pala piraakkal kannaip parikkum vakaiyil alakaaka vanthullana. aanaal avvaaru athanai vaanka nenaikkum poathu, mikavum kavanamaaka irukka vaendum. aenenel sareyana alavu piraavai aneyaaviddaal, udalil pala pirachchanaikal aerpaduvathodu, avai alakaiyum keduththuvidum. athilum alakaaka ullathu enru sareyana alavillaatha piraavai vaankiyap pin, athanai aneyum poathu irukkamaakavo allathu thalarvaakavo … Continue reading "eduppaana maarpakkamum piraa anevathan pirachchanaikalum"
eduppaana maarpakkamum piraa anevathan pirachchanaikalum

பெரும்பாலான பெண்கள் ஸ்மார்ட்டாகவும், ஃபேன்ஸியாகவும் இருக்கும் பிராவை அதிகம் தேர்ந்தெடுத்து அணிவார்கள். இவ்வாறு தற்போது பல பிராக்கள் கண்ணைப் பறிக்கும் வகையில் அழகாக வந்துள்ளன. ஆனால் அவ்வாறு அதனை வாங்க நினைக்கும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சரியான அளவு பிராவை அணியாவிட்டால், உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுவதோடு, அவை அழகையும் கெடுத்துவிடும்.

அதிலும் அழகாக உள்ளது என்று சரியான அளவில்லாத பிராவை வாங்கியப் பின், அதனை அணியும் போது இறுக்கமாகவோ அல்லது தளர்வாகவோ இருந்தால், அத்தகைய பிராக்களை நிச்சயம் அணிய வேண்டாம். ஏனெனில் அவை அழகைக் கெடுப்பதோடு, உடலில் பல பிரச்சனைகளையும் உண்டாக்கும். உதாரணமாக, இறுக்கமான பிராக்களை அணிந்தால், அவை மார்பகத்தில் இரத்த ஓட்டத்தை தடுத்து, மார்பகப் புற்றுநோயை உண்டாக்கும். அதுவே தளர்வாக உள்ள பிராக்களை அணிந்தால், அவை மார்பகத்தின் அழகு மற்றும் அளவையே கெடுத்துவிடும். எனவே பிராக்களை வாங்கும் போது, சரியான அளவை பார்த்து வாங்க வேண்டும். இப்போது சரியான அளவில்லாத பிராக்களை அணிந்தால், எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, இனிமேல் கவனமாக இருங்கள்.

மார்பக வலி
தவறான பிரா அணிவதால் ஏற்படுவதில் ஒன்று தான் மார்பக வலி. அதிலும் மிகவும் இறுக்கமான பிராவை சிலர் அணிகின்றனர். இதனால் ஒருவித வசதியின்மை இருப்பதுடன், அது மார்பக வலியையும் உண்டாக்கும். 

முதுகு வலி
மார்பகத்திற்கு ஏற்றவாறு பிராவை அணியாவிட்டால், முதுகு வலியும் வரக்கூடும்.

தொங்கும் மார்பகம்
தவறான பிராவை அணிந்தால், அது மார்பகத்தின் வடிவத்தையும், அளவையும் பாழாக்கிவிடும். அதிலும் சிலர் மார்பகம் பெரிதாக உள்ளது என்று, மிகவும் இறுக்கமான பிராவை அணிந்து, சரியான வடிவத்தில் வருமாறு அணிவார்கள். இவ்வாறு இறுக்கமானதை அணிந்தால், அவை மார்பகத்தில் தொய்வை ஏற்படுத்தி, தொங்கும் நிலையை ஏற்படுத்துவதோடு, மிகவும் கனமானதாகவும் மாற்றும்.

கழுத்து மற்றும் தோள்பட்டை வலி
மார்பகத்திற்கு ஏற்ற சரியான பிராவை அணியாவிட்டாலும், கழுத்து மற்றும் தோள்பட்டை வலியானது ஏற்படும். எனவே இத்தகைய வலியை தவிர்ப்பதற்கு, சரியான பிரா அளவை பார்த்து வாங்கி, அணிவதே சிறந்தது.

நிணநீர் முடிச்சுக்கள்
மார்பகம் பெரிதாக உள்ளதென்று, சிறிய அளவு பிராவை அணிந்தால், அவை மார்பகத்தில் உள்ள நிணநீர் முடிச்சுக்களின் செயலிழப்பிற்கு வழிவகுக்கும். எனவே சரியான பிராவையே எப்போதும் தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.

மார்பக அளவு
ஒருவேளை மார்பகத்திற்கு ஏற்றவாறும், வசதியான நிலையை ஏற்படுத்தும் பிராவை அணியாவிட்டால், மார்பகத்தின் அளவு அதிகமாகும் அல்லது குறையும்.

மோசமான தோரணை
தவறான பிராவை அணிந்தால், தோரணையே மோசமானதாக இருக்கும். மேலும் இதனாலும் முதுகு, தோள்பட்டை மற்றும் கழுத்து போன்ற இடங்களில் கடுமையான வலி ஏற்படும்.

மார்பக புற்றுநோய்
ஆம், தவறான பிராவை அணிந்தால், அவை மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும். எனவே பெண்கள் பிராவை வாங்கும் போது, சரியான அளவை பார்த்து வாங்க வேண்டும். இல்லாவிட்டால், அவை இரத்த ஓட்டத்தை தடுத்து, இறுதியில் மார்பக புற்றுநோயை உண்டாக்கும்.

சரும உராய்வுகள்
மார்பகத்திற்கு ஏற்ற அளவு பிராவை தேர்ந்தெடுத்து அணியாவிட்டால், மார்பகத்தைச் சுற்றியுள்ள சருமமானது அதிகப்படியான உராய்வுகளுடன் இருக்கும்.

Popular Post

Tips