பாப்பா

poovaippoala chirikka vaenum paappaa- nee pukal peravae valara vaenum paappaa! nallavarraip padikka vaenum paappaa- nee nadakka vaenum athupoala paappaa!   annai thanthai theyvamunakku paappaa- nee avarkal paatham paneya vaenum paappaa! koodi vaalap palaka vaenum paappaa nam koodduravae naadduyarvu paappaa!   namathu naadu namathu kannae paappaa-nee naadu uyara ulaikka vanum paappaa ulakam viyakka uyara vaenum paappaa-nee … Continue reading "paappaa"
paappaa

பூவைப்போல சிரிக்க வேணும் பாப்பா- நீ
புகழ் பெறவே வளர வேணும் பாப்பா!
நல்லவற்றைப் படிக்க வேணும் பாப்பா- நீ
நடக்க வேணும் அதுபோல பாப்பா!

 

அன்னை தந்தை தெய்வமுனக்கு பாப்பா- நீ
அவர்கள் பாதம் பணிய வேணும் பாப்பா!
கூடி வாழப் பழக வேணும் பாப்பா
நம் கூட்டுறவே நாட்டுயர்வு பாப்பா!

 

நமது நாடு நமது கண்ணே பாப்பா-நீ
நாடு உயர உழைக்க வணும் பாப்பா
உலகம் வியக்க உயர வேணும் பாப்பா-நீ
உறுதியோடு வெற்றி பெறுக பாப்பா

Popular Post

Tips