கண்களை அலங்கரிக்க

kankalai maddum nanraaka alankariththuviddaalae poathum… paathi alaku vanthuvidum. enavae unkalaich chollum kankalai alakaaka alankariththuk kollunkal.   oru chilarukku ai lainar kooda poadath theriyaathu. aanaal theriyaathu enru vidduvida vaendaam. veeddil irukkumpoathu poaddu muyarchi cheythu kondae irunkal. naaladaivil neenkalae periya ai lainar kalaijaraaka maari unkal nanpikalukku poadduviddu chapaash perupavaraaka maaruveerkal.   chari kankalai eppadi alankarippathu enru paarppoam…… … Continue reading "kankalai alankarikka"
kankalai alankarikka

கண்களை மட்டும் நன்றாக அலங்கரித்துவிட்டாலே போதும்… பாதி அழகு வந்துவிடும். எனவே உங்களைச் சொல்லும் கண்களை அழகாக அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

 

ஒரு சிலருக்கு ஐ லைனர் கூட போடத் தெரியாது. ஆனால் தெரியாது என்று விட்டுவிட வேண்டாம். வீட்டில் இருக்கும்போது போட்டு முயற்சி செய்து கொண்டே இருங்கள். நாளடைவில் நீங்களே பெரிய ஐ லைனர் கலைஞராக மாறி உங்கள் நண்பிகளுக்கு போட்டுவிட்டு சபாஷ் பெறுபவராக மாறுவீர்கள்.

 

சரி கண்களை எப்படி அலங்கரிப்பது என்று பார்ப்போம்……

 

உங்கள் கண்கள் பெரிய இமைகளைக் கொண்டிருப்பின்…

 

கண் இமைகளை சிறியது போன்று காட்டுவதற்கு இமைகளின் மேல் முனைப் பகுதியில் அழுத்தமான ஐ ஷேடோக்களை இடவும். பிறகு அதே வர்ணத்தின் இளம் நிறத்தை நடுப்பகுதியில் இட்டு மீண்டும் அழுத்தமான நிறத்தைக் கொண்டு முடியுங்கள். கண்ணின் முனைப்பகுதிகளில் ஐ லைனரை நன்கு அழுத்தமாக வைத்து கண்களின் அழகுக்கு அழகு சேருங்கள்.

 

சிறிய கண்களைக் கொண்டவர்கள்..

 

நன்கு அழுத்தமான வர்ண ஐ ஷேடோவைக் கொண்டு இமைகளின் மேற்புறங்களில் கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள். இப்போது ஐ லைனரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டுடன் இமைகளின் இறுதியை முடியுங்கள். சிறிய கண்களும் தற்போது எடுப்பாகத் தோன்றும்.

 

உள்நோக்கி இருக்கும் கண்களுக்கு…

 

கண்கள் மீது ஐ ஷேடோக்களை இடாமல் மேல் இமையில் அழுத்தமாக ஐ லைனரை மட்டும் அழகாக போட்டு, இமையின் முடிவில் அழுத்தமாக முடிக்கவும். இது உங்கள் கண்களை அழகாக்கும்.

Popular Post

Tips