திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்?

thikil padankalaip paarththaal aen penkal payappadukiraarkal enru chinthiththathundaa? atharku kaaranam penkalin moolai thaan enru oru aayvu theriviththullathu. thikil padankal paarththaal penkal veel enru kaththuvathu valakkam. kireechchidda peethiyudan thikil padam paarkkum penkal athikam. thikilooddum entha vishayaththukkumae aankalai vida penkalthaan athikam payappadukiraarkal. itharku enna kaaranam, penkal maddum aen payappadukiraarkal enru landanaich chaerntha yoonevarchiddi kaalaejin aaraaychchiyaalarkal aayvu maerkondanar. intha … Continue reading "thikil padankalai paarththu penkal payappaduvathu aen?"
thikil padankalai paarththu penkal payappaduvathu aen?

திகில் படங்களைப் பார்த்தால் ஏன் பெண்கள் பயப்படுகிறார்கள் என்று சிந்தித்ததுண்டா? அதற்கு காரணம் பெண்களின் மூளை தான் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. திகில் படங்கள் பார்த்தால் பெண்கள் வீல் என்று கத்துவது வழக்கம். கிரீச்சிட்ட பீதியுடன் திகில் படம் பார்க்கும் பெண்கள் அதிகம். திகிலூட்டும் எந்த விஷயத்துக்குமே ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள். இதற்கு என்ன காரணம், பெண்கள் மட்டும் ஏன் பயப்படுகிறார்கள் என்று லண்டனைச் சேர்ந்த யூனிவர்சிட்டி காலேஜின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சுமார் 30 ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் அழகான இயற்கை காட்சி புகைப்படங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் நிறைந்த புகைப்படங்களும் காண்பிக்கப்பட்டன. அழகான படங்களைப் பார்க்கும்போது சிரிக்க வேண்டும் என்றும், வன்முறைப் படங்களைப் பார்க்கையில் முகத்தை சோகமாக வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டார்கள். அதன் பிறகு அவர்களின் நினைவாற்றல் பரிசோதிக்கப்பட்டது. அதில் பெண்கள் அழகான, அமைதியான விஷயங்களை எதிர்கொள்வதை விட வன்முறை உள்ளிட்ட மோசமானவற்றைப் பார்க்கும்போது அவர்களின் பய உணர்வுகள் அதிகரிப்பது தெரிய வந்தது.

அடுத்து திகில் படம் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் இருப்பதால், அவர்களின் மூளை தூண்டுவிக்கப்பட்டு அதீத அச்சத்திற்குள்ளாகின்றனர். அதனால் தான் பயப்படுகிறார்கள். ஆனால் ஆண்கள் அவ்வாறு எதிர்பார்ப்பதில்லை. வரட்டும் பார்க்கலாம் என்றிருக்கின்றனர்.

இது குறித்து ஆய்வுக்குத் தலைமை தாங்கிய டாக்டர் கியூலிலியா கல்லி கூறியதாவது,

பெண்கள் திகில் படங்களைப் பார்க்கையில் எப்பொழுது திகில் காட்சி வரும் என்ற எதிர்பார்ப்பிலேயே இருப்பார்கள். ஒரு வகையான இசை வந்தால் உடனே திகில் காட்சி வரப்போகிறது என்று நினைத்துக் கொள்வார்கள். இது அவர்கள் மூளையில் பதிந்துவிடுகிறது. ஆனால் ஆண்கள் அப்படியில்லை.

கெட்டவைகளை எதிர்பார்ப்பது, அவற்றை நினைவில் வைத்துக் கொள்வது தான் பயத்திற்கு காரணம் என்றார்.

seizure-677

Popular Post

Tips