அழகுச் சிலையாக……..

muthalil nam charumam entha vakaiyaich chaarnthathu enpathaip purinthukolla vaendum. varanda charumamaa, enneych charumamaa enpathai oru kaithaerntha alakuk kalai nepunaridam kaeddarinthu kondu alaku paraamarippai maerkondaal, alaku enrenrum nam pakkamthaan. maelum nam unavil chamachcheeraana chaththukkaladankiya dayad idam peravaendum. oruchilar, vaalippaana thaekamum, minu minuppaana charumamum kondu chelippaakak kaadchiyalippaarkal. itharku mika mukkiyak kaaranam chamachcheeraana unavup palakkamae. ippadippadda alakai nerantharamaakath … Continue reading "alakuch chilaiyaaka…….."
alakuch chilaiyaaka……..

முதலில் நம் சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வறண்ட சருமமா, எண்ணெய்ச் சருமமா என்பதை ஒரு கைதேர்ந்த அழகுக் கலை நிபுணரிடம் கேட்டறிந்து கொண்டு அழகு பராமரிப்பை மேற்கொண்டால், அழகு என்றென்றும் நம் பக்கம்தான். மேலும் நம் உணவில் சமச்சீரான சத்துக்களடங்கிய டயட் இடம் பெறவேண்டும். ஒருசிலர், வாளிப்பான தேகமும், மினு மினுப்பான சருமமும் கொண்டு செழிப்பாகக் காட்சியளிப்பார்கள். இதற்கு மிக முக்கியக் காரணம் சமச்சீரான உணவுப் பழக்கமே. இப்படிப்பட்ட அழகை நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொள்ள, தொடர்ந்து பராமரிப்பும் தேவை. வாரம் ஒருமுறை சருமத்தில் சேரும் அழுக்கை உடல் முழுவதும் ''ஸ்க்ரப்'' செய்து நீக்கி, முகம், கை, கால்களுக்கு மசாஜ் எடுத்துக் கொண்டால் சருமச் சுருக்கங்களை நீக்கலாம். வறண்ட தேகம் உடையவர்கள், பதினைந்து நாட்களுக்கொருமுறை ஏதாவது ''ப்ரூட் பெக்'' எடுத்துக்கொண்டு ''பேஷியல்'' செய்துகொள்வது அவசியம். இதனால் சருமத்தில் இழந்த தண்ணீர்ச் சத்துக்கள் மீண்டும் பெறப்படுகின்றன.........

 


உங்களுக்காக சில குறிப்புக்கள் இதோ.........

 


1. நன்கு பழுத்த பப்பாளி விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் நான்கு ஸ்பூன் தேன், சிறிது கிளிசரின் சேர்த்து கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள பகுதி தவிர மீதி இடங்களில் பற்றுப்போட்டு, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவிவர முகம் பிரகாசிக்கும்.


2. பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து, அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறிவிடும்.


3. தின​மும் குளிக்​கும் முன்பு பாலேடை முகம் முழு​வ​தும் தடவி பத்து நிமி​டம் வைத்​தி​ருந்து கழு​வி​னால் வறண்ட முகம் பொலிவு பெறும்.​


4. ஆரஞ்​சுப் பழத்தை இரண்​டாக வெட்டி முகத்​தில் தேய்த்து,​​ பத்து நிமி​டம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்​டும்.​ தினம் இவ்​வாறு செய்து வந்​தால் முகம் பள​ப​ளப்​பா​கும்,​​ இள​மை​யு​ட​னும் இருக்​கும்.​


5. குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும் . அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.


6. தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறு, ஒரு ஸ்பூன் காரட்சாறு, ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர், ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.


7. தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள் கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ் செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.


8. ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன், தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம் எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ் செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளிச்சிடும்.


9. இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும். சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச்சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாக மாறும்.


10. ஒரு ஸ்பூன் தேனில், கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றியும் முகத்திலும் போட்டு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.


11. சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.


12. பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.


13. ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும்.


14. புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம்பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.


15. முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றையும் கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து,முகம் பொலிவுடன் இருக்கும்.


16. வெள்ளை முள்ளங்கி சாறுடன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, மிதமான சுடுநீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர, வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு நிறப் புள்ளி மறையும்.


17. முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை அரைத்து, அதோடு பால், பச்சை பயறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.


18. கடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி பழச்சாறு தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.


19. வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்துமுகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.


20. கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம்மிருதுவாகும்.

Popular Post

Tips