வாயிருந்தும் நான் ஊமை

vaalkkaiyai vaala kaachu thaevai, padukkai vaankavum kaachu thaevai, unavu unnavum kaachu thaevai, pirarukku uthavavum kaachu thaevai, puththakam achchidavum kaachu thaevai. enna thaan ulaiththu urakkaththaiyum viyarvaiyaiyum eluththaakkinaalum; avaikalai puththakamaakka pirarin uthaviyum thaevai padukirathu uravukalae. paarththiyaa, muthalil padiyunkal enraan.   ippoathu panam kodu enkiraanenru enne vidaatheerkal. padippathu unkaloadu poakum; puththakam piraraiyum padikka vaikkum. padippu pirarukku ‘padippinai kondu’ … Continue reading "vaayirunthum naan oomai"
vaayirunthum naan oomai
வாழ்க்கையை வாழ காசு தேவை, படுக்கை வாங்கவும் காசு தேவை, உணவு உண்ணவும் காசு தேவை, பிறருக்கு உதவவும் காசு தேவை, புத்தகம் அச்சிடவும் காசு தேவை. என்ன தான் உழைத்து உறக்கத்தையும் வியர்வையையும் எழுத்தாக்கினாலும்; அவைகளை புத்தகமாக்க பிறரின் உதவியும் தேவை படுகிறது உறவுகளே. பார்த்தியா, முதலில் படியுங்கள் என்றான்.

 

இப்போது பணம் கொடு என்கிறானென்று எண்ணி விடாதீர்கள். படிப்பது உங்களோடு போகும்; புத்தகம் பிறரையும் படிக்க வைக்கும். படிப்பு பிறருக்கு ‘படிப்பினை கொண்டு’ எவ்வினையையும் செய்விக்கும். எனவே புத்தகங்கள் வாங்குங்கள் என வற்புறுத்த இந்த புத்தகத்தை திறக்கவில்லை. நிறைய பேர் நம் புத்தகங்களை பெற ஆர்வம் காட்டி மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். அவர்களுக்கு நம் புத்தகம் பற்றிய விவரத்தை அறிவிக்கவும்.


படித்துவிட்டவர்கள் புத்தகத்தை பற்றி ஏதேனும் கருத்து தெரிவிக்க எண்ணினால், அதை இங்கு (அப்புத்தகங்களின் கீழ்) தெரிவிக்கவுமே இப்பக்கம் திறக்கப் பட்டுள்ளது. பொதுவாக, நம் புத்தகங்களின் மூலம் வரும் வருமானத்தில் பாதி அடுத்த புத்தகம் அச்சிடுவதற்கும், மீதி, எனை எழுதவைத்த ‘சமுகத்தின் இயலாமைக்கு ‘தன் அணிலளவு பங்கினையாவது கொடுத்து உதவவுமே ‘பயன்படுத்த படுமென்று ஆரம்பத்தில் சொன்னதை, இன்று வரை செய்து வருகிறோம்.

 

உண்மையை சொல்வதென்றால், பாதியளவு வருமானம் கூட வராமல் இரண்டையுமே இன்று வரை செய்து வருகிறோம். படிக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் ‘அங்கிகாரம் கடந்தும், ஆகும் செலவுகளை கடந்தும், படைப்புகளின் பயணமும் தொடர்கிறது. இனியும், உங்களின் ஆதரவும், இறைவனுமே துணை.

 

நன்றிகளுடன்..
வித்யாசாகர்

Popular Post

Tips